வடக்கு வாழ்கிறது... தெற்கு தேய்கிறது - மத்திய அரசுப் பணி நியமனங்கள் சர்ச்சை... | South Indians Neglected for Central government jobs - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/03/2019)

வடக்கு வாழ்கிறது... தெற்கு தேய்கிறது - மத்திய அரசுப் பணி நியமனங்கள் சர்ச்சை...

- விஷ்ணுபிரசாத்

மீபகாலமாக தமிழகத்திலிருந்து மத்திய அரசுப் பணிகளுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டேவருகிறது. சமீபத்தில், தென்னக ரயில்வேயில் 1,765 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில்  1,600 பேர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களே தேர்வாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவிர, தமிழகத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகங்களில் கடந்த 12 ஆண்டுகளில், பத்து விழுக்காட்டினர்கூட தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், பணிக்கு அமர்த்தப்படவில்லை.

இதுகுறித்து வருமான வரித்துறை ஊழியர்கள் சங்கப் பொதுச்செயலாளர் எம்.எஸ்.வெங்கடேசன் பேசுகையில், “தமிழகத்தில் வருமான வரித்துறை, கலால் துறை, பாஸ்போர்ட் அலுவலகம் என்று மத்திய அரசின் 55 வகையான அலுவலகங்கள் இருக்கின்றன. இந்த அலுவலகங் களில் குரூப் ‘சி’ பிரிவுக்கான பணியாளர்கள், மத்தியப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். இதன்படி இந்தத் தேர்வு 1996-ம் ஆண்டுவரை மண்டல அளவில் நடந்தது. இதனால், அந்தந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு, அவர்கள் பகுதியிலேயே வேலை கிடைத்தது. ஆனால், இந்தத் தேர்வு முறைக்கு எதிராக குஜராத்தைச் சேர்ந்த ஒருவர் வழக்கு தொடுத்ததால், ‘இந்தியா முழுமைக்கும் ஒரே ரேங்க் சிஸ்டத்தைத்தான் பின்பற்றவேண்டும்’ என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க