மிஸ்டர் கழுகு: கட்டுக்கட்டாய் பணம்... ‘ஹவாலா’ தி.மு.க... ‘ஆம்னி பஸ்’ அ.தி.மு.க! | Mr.Kazhugu - Politics & Current affairs - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/03/2019)

மிஸ்டர் கழுகு: கட்டுக்கட்டாய் பணம்... ‘ஹவாலா’ தி.மு.க... ‘ஆம்னி பஸ்’ அ.தி.மு.க!

வியர்க்க... விறுவிறுக்க... வெயிலில் வந்த கழுகாருக்கு, மண்பானைத் தண்ணீர் கொடுத்தோம். சுவைத்துக் குடித்த கழுகார், “தமிழகம் முழுவதும் குடிநீர்ப் பிரச்னை தலைதூக்க ஆரம்பித்துவிட்டது. மின்வெட்டும் ரெடியாக இருக்கிறது. தேர்தலுக்கு முன்பாக இதெல்லாம் விஸ்வரூபம் எடுத்துவிடக்கூடாது என்பதற்காகப் பதறிப்போய் பல வேலைகளையும் செய்துகொண்டுள்ளது ஆளுங்கட்சி. அதாவது, பிரச்னைகள் ஏதும் வெடித்து விடாமல் அணைபோட்டுக் கொண்டுள்ளனர். ஆனாலும், தேர்தலுக்கு மறுநாளே அந்த அணை உடைந்துவிடும்” என்றபடி நம் கேள்விகளை எதிர்கொள்ள ஆரம்பித்தார்.

‘‘ஆளும்கட்சி கூட்டணியின் தேர்தல் வேலைகள் எப்படிப் போகின்றன?’’

‘‘பல இடங்களில் உரசல் கிளம்பிவிட்டது. மத்திய சென்னை பா.ம.க வேட்பாளர் சாம் பால் அறிமுகக் கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆதிராஜாராம், கூட்டணிக் கட்சித் தலைவரான ஜி.கே.வாசன் பெயரைச் சொல்ல வில்லை. த.மா.கா-வினர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தும், கடைசி வரையில் பிடிவாதமாக அவர் பெயரைச் சொல்லாமலே பேசி முடித்திருக்கிறார்.’’

‘‘ம்...’’

‘‘வடசென்னை தே.மு.தி.க வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ் அறிமுகக் கூட்டத்திலும், ஜி.கே. வாசனின் பெயரை யாரும் சொல்லவில்லை. த.மா.கா வடசென்னை மாவட்டத்தலைவர் பிஜூ சாக்கோ தலைமையில் 300 பேர் கூடி, நிகழ்ச்சி நடைபெற்ற மண்டபத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரசாரத்தின் தொடக்கத்திலேயே ‘ஈகோ’ யுத்தம் தலைதூக்கியுள்ளதால், அ.தி.மு.க தலைமை தலையைப் பிய்த்துக்கொள்கிறது.’’

‘‘கூட்டணிக் கட்சிகளுடன் ஒத்துழைத்துத் தேர்தல் வேலை பார்க்கும்படி, அ.தி.மு.க-வினருக்கு எடப்பாடி பழனிசாமி கடுமையாக எச்சரித்திருக்கி றாராமே?”