எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ் | Parliament Election Express News - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/03/2019)

எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

ஒற்றுமையாக வந்த அ.தி.மு.க! பூரிப்பில் ராமதாஸ்

த்தியச் சென்னை தொகுதியின் பா.ம.க வேட்பாளர் சாம் பாலின் அறிமுகக் கூட்டம், மார்ச் 21-ம் தேதி சென்னை எழும்பூரில் நடைபெற்றது. பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மத்திய சென்னை தொகுதிக்கு காய்நகர்த்திய கோகுல இந்திரா, வளர்மதி, வெங்கடேஷ் பாபு, ஜே.சி.டி பிரபாகர், பலராம் ஆகியோர் ஒற்றுமையாக வந்தார்கள். இதைப் பார்த்துப் பூரித்துப்போனாராம் ராமதாஸ். “எங்க ஆளுங்க யாராவது ஒத்துழைக்கலைனா, என்கிட்ட சொல்லுங்க, நான் பார்த்துக்குறேன்” என ராமதாஸுக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த உறுதிமொழிதான் இதற்குக் காரணமாம்.

சு.வெங்கடேசன் இ.கம்யூனிஸ்ட்டா?

துரை தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு மாலையிட்டபோது, தேர்தல் விதியை மீறியதாக தல்லாகுளம் காவல்நிலையத்தில் அவர்மீது வழக்குப் பதிவு செய்தார்கள். அதில், அவரை இந்தியக் கம்யூனிஸ்ட் வேட்பாளர் என்று தவறாகக் குறிப்பிட்டுள்ளனர். ‘இது குறித்து போலீஸில் புகார் செய்த தேர்தல் அலுவலர்களுக்கு இதுகூட தெரியாதா?’ என்று தலையில் அடித்துக்கொள்கிறார்கள் தோழர்கள்!