வேட்பாளர் தேர்வில் கைமாறிய கோடிகள்... கொதிக்கும் தி.மு.க தொண்டர்கள்! | Puducherry by-election DMK candidate controversy - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/03/2019)

வேட்பாளர் தேர்வில் கைமாறிய கோடிகள்... கொதிக்கும் தி.மு.க தொண்டர்கள்!

தடதடக்கும் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்…

ரசியல் கட்சிகளில், வேட்பாளர் தேர்வில் பணம் புகுந்துவிளையாடுகிறது. ‘கட்சிக்காக உழைக்கும் தொண்டர்கள் எல்லாம் இனி தேவை இல்லை; ஓட்டு வாங்க பணமே பிரதானம்’ என்கிற அறம் தொலைத்த முடிவுக்குக் கட்சிகள் வந்துவிட்டனபோலும். கரன்ஸியை எங்கு, எப்படிக் கை மாற்றுகிறார்கள் என்பது தெரியவில்லை. மொத்தத்தில் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பது மட்டும் புரிகிறது. புதுச்சேரி மாநிலத்தில், தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலிலும் அப்படி ஒரு சர்ச்சை வெடித்திருக்கிறது. “கோடிக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு கட்சியில் இல்லாத தொழிலதிபரை வேட்பாளராக்கியிருக்கிறார்கள்” என்று கொதிக்கிறார்கள் புதுச்சேரி உடன்பிறப்புகள்!

புதுச்சேரி, தட்டாஞ்சாவடி தொகுதியின் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான அசோக் ஆனந்த், சொத்துக்குவிப்பு வழக்கில் பதவியை இழந்ததால், அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தலை அறிவித்திருக்கிறது தேர்தல் ஆணையம். என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் அசோக் ஆனந்தின் சகோதரியே அங்கு போட்டியிடுவதாகத் தகவல்கள் வெளியாகின. இந்தநிலையில், கூட்டணிக் கட்சியான தி.மு.க-வே அங்கு போட்டியிடும் என்று அறிவித்தார் முதல்வர் நாராயணசாமி. அதையடுத்து ‘தங்கம் நல்லெண்ணெய்’ நிறுவனத்தின் உரிமையாளர் கே.வெங்கடேசன் என்பவரை வேட்பாளராக அறிவித்தார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். இதுதான் கட்சியினரைக் கொந்தளிக்க வைத்திருக்கிறது. அறிவிப்பைத் தொடர்ந்து தட்டாஞ்சாவடி தொகுதிச் செயலாளர் சிவதாசன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க