உள்ளடி வேலைகளை சரிக்கட்ட வேண்டும் சி.பி.ஆர்! - விறுவிறு வி.ஐ.பி - கோயம்புத்தூர் | Coimbatore Lok Sabha constituency winning status - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/03/2019)

உள்ளடி வேலைகளை சரிக்கட்ட வேண்டும் சி.பி.ஆர்! - விறுவிறு வி.ஐ.பி - கோயம்புத்தூர்

ஓவியம்: அரஸ்

பி.ஜே.பி பிரமுகர் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடும் தொகுதி என்பதுடன், பி.ஜே.பி வலுவாக இருக்கும் தொகுதி என்பதால், உற்றுநோக்கப்படுகிறது, கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதி. பல்லடம், சூலூர், கவுண்டம்பாளையம், கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு, சிங்காநல்லூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது, கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதி.

தொகுதியைத் தேர்வு செய்யக் காரணம் என்ன?

‘தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்’ என்று முழங்கிவரும் பி.ஜே.பி-யினருக்கு நம்பிக்கையூட்டும் தொகுதி, கோயம்புத்தூர். கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு சம்பவத்துக்குப் பிறகு ஏற்பட்ட மதரீதியான பிளவுகளில் தன்னை வளர்த்துக்கொண்ட பி.ஜே.பி., ஒவ்வொரு தேர்தலிலும் கோயம்புத்தூர் தொகுதியைக் கைப்பற்றப் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்ததும், தங்களுக்கு ஒதுக்கிய ஐந்து தொகுதிகளில், கோயம்புத்தூர் கண்டிப்பாக இருக்கவேண்டும் என்று கறார் காட்டியது, பி.ஜே.பி. இத்தொகுதியில், 1998 மற்றும் 1999-ம் ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்றத்தேர்தலில், சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக கோயம்புத்தூர் தொகுதி அ.தி.மு.க வசம் இருந்தது. ஏற்கெனவே தொகுதியில் பி.ஜே.பி-க்கு உள்ள செல்வாக்கு, கடந்த ஐந்து ஆண்டுகளாக அ.தி.மு.க தொகுதியைக் கையில் வைத்திருந்தது... இவை எல்லாம் தனக்கு பலம் சேர்க்கும் என்று எண்ணி கோயம்புத்தூர் தொகுதியில் களமிறங்கியிருக்கிறார், சி.பி.ராதாகிருஷ்ணன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க