வாக்காளர்களை வலுவாக ‘கவனிக்கும்’ பா.ம.க! - விறுவிறு வி.ஐ.பி - தர்மபுரி | Dharmapuri Lok Sabha constituency winning status - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/03/2019)

வாக்காளர்களை வலுவாக ‘கவனிக்கும்’ பா.ம.க! - விறுவிறு வி.ஐ.பி - தர்மபுரி

ஓவியம்: கார்த்திகேயன் மேடி

பா.ம.க சார்பில் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவதால், ஸ்டார் அந்தஸ்தைப் பெற்றிருக்கிறது, தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதி. மேட்டூர், தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிபட்டி, அரூர் (தனி) ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது, தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதி. இத்தொகுதியில் தி.மு.க, பா.ம.க, அ.ம.மு.க ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

தொகுதியைத் தேர்வு செய்யக் காரணம் என்ன?

அ.தி.மு.க கூட்டணி பலம், தொகுதியில் 50 சதவிகிதம் உள்ள வன்னியர் சமூகத்தினரின் ஓட்டு வங்கி... இவையே இத்தொகுதியில் அன்புமணி மீண்டும் போட்டியிட முக்கியக் காரணங்கள். கடந்த 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், பி.ஜே.பி கூட்டணியில் தேர்தலைச் சந்தித்தது பா.ம.க. அப்போது எட்டு தொகுதிகளில் போட்டியிட்டு, ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வென்றது. அது, தர்மபுரி தொகுதி. பா.ம.க வேட்பாளர்களில் அப்போது அன்புமணி மட்டுமே வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தத் தொகுதியில், பா.ம.க நான்கு முறை வெற்றி பெற்றிருக்கிறது என்பதும் இன்னொரு முக்கியமான விஷயம். மக்களுக்குத் தேவையான அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றி இருப்பதாகச் சொல்லிவரும் அன்புமணி, தனக்குத் தொகுதியில் இருக்கும் செல்வாக்கை நம்பித்தான் மீண்டும் தர்மபுரியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.