அ.தி.மு.க - பி.ஜே.பி - “கட்டாய கல்யாணம்போல, இது கட்டாய கூட்டணி!” | Congress P.Chidambaram exclusive interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/03/2019)

அ.தி.மு.க - பி.ஜே.பி - “கட்டாய கல்யாணம்போல, இது கட்டாய கூட்டணி!”

சிதம்பரம் அதிரடி

குற்றச்சாட்டுகளை முன்வைத்து கேள்வி எழுப்பினாலும் சரி... ‘குண்டக்க மண்டக்க’ கேள்வி எழுப்பினாலும் சரி... அசராமல் புள்ளிவிவரங்களுடன் துல்லியமாய் அடிப்பார் ப.சிதம்பரம். ஆனால், இந்தமுறை நம் பேட்டியில், ஐ.என்.எக்ஸ் மீடியா, சாரதா சிட்பண்ட்ஸ் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் இருப்பதாகக் கூறி, கவனமாகத் தவிர்த்துவிட்டார் அப்பச்சி. அவரிடம் பேசியதிலிருந்து...  

“தமிழ்நாட்டில், பி.ஜே.பி-க்கு இனி வேலையில்லை என்றீர்கள்... இப்போது பிரதான திராவிடக் கட்சியான அ.தி.மு.க–வுடன் கூட்டணி வைத்துவிட்டார்களே?”

“இப்போதும் அதைத்தான் சொல்கிறேன். தமிழ்நாட்டில் இனி பி.ஜே.பி-க்கு வேலையில்லை. அவர்கள் அ.தி.மு.க-வினரை உருட்டி மிரட்டி கூட்டணி வைத்துள்ளனர் என்பதே உண்மை. தவிர, அ.தி.மு.க கடந்தமுறை வாங்கிய 44 சதவிகித வாக்குவங்கி, இப்போது அந்தக் கட்சிக்குக் கிடையாது. கட்சி இரண்டாக உடைந்துவிட்டது. ஜெயலலிதா இடத்தை இன்றைய முதல்வர், துணை முதல்வர் யாராலும் நிரப்ப முடியாது. இது கட்டாயக் கல்யாணம் போல... கட்டாயக் கூட்டணி!”