தாயை இழந்த பிள்ளைபோல் அ.தி.மு.க-வில் அநாதையாக இருக்கிறேன்! | DMDK former MLA Tamizhazhagan current situation - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/03/2019)

தாயை இழந்த பிள்ளைபோல் அ.தி.மு.க-வில் அநாதையாக இருக்கிறேன்!

வேதனையில் தே.மு.தி.க முன்னாள் எம்.எல்.ஏ.

டலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதியில், 2011 - 2016 வரை  அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க எம்.எல்.ஏ-வாக இருந்தவர் தமிழழகன். இவர் தே.மு.தி.க சார்பில் போட்டியிட்டு பின்னர் ஒரே ஆண்டில் அ.தி.மு.க ஆதரவு எம்.எல்.ஏ-வாக மாறினார். 2012-ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை, தொகுதி வளர்ச்சிக்காக சந்திப்பதாகக் கூறி இவரும் மதுரை மத்திய தொகுதி தே.மு.தி.க எம்.எல்.ஏ-வான சுந்தர்ராஜனும் சந்தித்தனர்.

அந்தச் சந்திப்புக்குப் பின்னர் இவர்கள் இருவருமே அ.தி.மு.க ஆதரவு எம்.எல்.ஏ-க்களாக வலம்வந்தனர். ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை செல்வாக்காக இருந்த திட்டக்குடி எம்.எல்.ஏ தமிழழகன், ஜெயலலிதா மறைவுக்குப் பின் கட்சியினரால் புறக்கணிக்கப்பட்டார். இன்றைய சூழலில், தமிழக அரசியலில் தமிழழகன் எங்கு இருக்கிறார் என்பதே தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.