“அறிவாலயத்தில் வார் ரூம்... பிரசார வாகனத்தில் துர்கா!” | M.K.Stalin facing first election without Karunanidhi - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/03/2019)

“அறிவாலயத்தில் வார் ரூம்... பிரசார வாகனத்தில் துர்கா!”

ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்

“நான் தலைவர் கலைஞர் இல்லை. அவரைப்போல பேசத் தெரியாது. அவரைப்போல மொழி ஆளுமை கிடையாது. ஆனால், எதையும் முயற்சிசெய்துப் பார்க்கும் துணிவு கொண்டிருக்கிறேன்” - தலைவராகப் பொறுப்பேற்றபோது ஸ்டாலின் கூறிய வார்த்தைகள் இவை. 50 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில், கலைஞர் இல்லாமல் ஸ்டாலின் சந்திக்கும் முதல் தேர்தல் இது!

காலையில் ஒரு பிரசாரப் பொதுக்கூட்டம், மாலையில் ஒரு பிரசாரப் பொதுக்கூட்டம், இடைப்பட்ட நேரத்தில் வேனில் இருந்தபடியே மக்கள் சந்திப்பு என டாப் கியரில் வேகமெடுத்துள்ளது தி.மு.க-வின் பிரசார வியூகம். இதுகுறித்து ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்களிடம் பேசினோம். “ஸ்டாலினின் தேர்தல் பிரசாரத் திட்டத்தை எ.வ.வேலு, துரைமுருகன், நேரு உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளின் ஆலோசனையின்படி ஒருங்கிணைப்பு செய்துள்ளனர்.  தொகுதியின் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை செய்தே தேதி, பிரசார இடங்கள், பொதுக்கூட்ட ஏற்பாடுகளை முடிவுசெய்துள்ளனர். தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, ஏற்கெனவே நியமிக்கப்பட்டிருந்தது. அந்தக் குழு கொடுத்த அறிக்கையுடன், ஸ்டாலின் சொன்ன சில விஷயங்களையும் சேர்த்துத்தான் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டது.

தி.மு.க-வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தின் முதல்தளத்தில், தேர்தலுக்காக ‘வார் ரூம்’ செயல்பட ஆரம்பித்துள்ளது. இந்த வார் ரூமின் முக்கியப் பணியே சட்டரீதியாக ஏற்படும் பிரச்னைகளை சரிசெய்வதுதான். குறிப்பாக, வேட்புமனு தாக்கல்செய்வது முதல் தேர்தல் முறைகேடு, ஆளும் தரப்பிலும், அதிகாரிகள் தரப்பிலும் தி.மு.க-வினருக்குத் தரப்படும் நெருக்கடிகளை உடனடியாகத் தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டுசெல்வது ஆகிய பணிகளை இந்த சட்டப் பணிக்குழு மேற்கொள்ளும். இந்தக் குழு மாவட்டம்தோறும் உள்ள வழக்கறிஞர் அணியுடன் தொடர்பில் இருக்கும். ஒவ்வொரு வேட்பாளரின் வேட்புமனுவையும் இவர்கள் பார்த்து ஓ.கே செய்தபிறகே மனுவைத் தாக்கல்செய்ய உத்தரவிட்டுள்ளார்கள்.