பெண்கள் விவகாரத்தால் தலைமறைவானாரா முகிலன்? | Controversy about Activist Mugilan missing issue - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/03/2019)

பெண்கள் விவகாரத்தால் தலைமறைவானாரா முகிலன்?

சுழன்றடிக்கும் சர்ச்சைகள்... விடைதெரியாத கேள்விகள்...

‘முகிலன் எங்கே?’ கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகச் சுழன்றுவரும் இந்தக் கேள்விக்கு இன்னமும் விடை கிடைக்கவில்லை. சி.பி.சி.ஐ.டி போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். இந்த நிலையில்தான், முகிலன் காணாமல் போனதுக்குச் சொந்தப் பிரச்னைகள்தான் காரணம். பெண் விவகாரத்தில் சிக்கிய முகிலன் தலைமறைவாக இருக்கிறார்’ என்கிற சர்ச்சை வேகமாகச் சுழல ஆரம்பித்துள்ளது.

சென்னையில் கடந்த பிப்ரவரி 15 அன்று, பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் முகிலன். அப்போது, ஸ்டெர் லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தின் போது வெடித்தக் கலவரம் மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களுக்கு ஆலை, அரசு மற்றும் போலீஸ்தான் காரணம் என்பதை நிரூபிக்கக் கூடிய முக்கியமான ஆவணங்கள் அடங்கிய ஒரு குறும் படத்தை வெளி யிட்டார். அதன்பிறகு மதுரைக்கு ரயில் மூலமாகக் கிளம்பியதாகச் சொல்லப்பட்ட நிலையில்தான் மாயமாகிவிட்டார். காவல்துறையின்மீது சந்தேக ரேகைகள் படிந்திருந்த சூழலில், ‘சொந்த விஷயங்கள் காரணமாகவும் அவர் தலைமறைவாகியிருக்கக் கூடும்’ என்று ஆரம்பத்திலிருந்தே உலா வந்துகொண்டிருந்த ஒரு தகவல், தற்போது பொதுவெளியில் விவாதிக்கும் விஷயமாக மாறிவருகிறது.