‘சைல்டு செக்ஸ் டூரிஸம்’ | Child Sexual abuse in Chennai Kolapakkam school - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/03/2019)

‘சைல்டு செக்ஸ் டூரிஸம்’

பாலியல்ரீதியாக துன்புறுத்தப்பட்ட பள்ளிக் குழந்தைகள்... வழக்கை ஒன்றுமில்லாமல் ஆக்குகிறதா காவல்துறை?

சென்னை கொளப்பாக்கம் அருகே உள்ள இன்டர்நேஷனல் பள்ளி ஒன்றில், எல்.கே.ஜி படிக்கும் குழந்தைகளை அந்தப் பள்ளியின் பேருந்து உதவியாளர் உட்பட பள்ளியில் தங்கவரும் வெளிநாட்டினர் பாலியல்ரீதியாக துன்புறுத்தியிருப்பதாகக் கடந்த ஆண்டு புகார் கிளம்பியது. இதன் வழக்கு விசாரணை இன்னும் முடியாத நிலையில், “மோசமான வக்கிரத்துக்கு ஆளாகியிருக்கும் எங்கள் குழந்தைகளுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை; இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இருவர் பிணையில் வெளியே வந்துவிட்டார்கள். இவர்களுக்குப் பின்னால் உள்ள குற்றவாளிகளை காவல்துறையே தப்பவைக்கிறது” என்று பெற்றோர் தரப்பில் அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவிக்கிறார்கள். இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்துப் பேசினோம். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெயர் விவரம் உள்ளிட்டவற்றை கட்டுரையில் மறைத்துள்ளோம்.