கர்ப்பிணிப் பெண்களுக்கு நலத்திட்டங்கள்... பழங்குடி பெண்ணின் மரணத்துக்கு பதில் என்ன? | Coimbatore Tribal woman dies during child birth - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/03/2019)

கர்ப்பிணிப் பெண்களுக்கு நலத்திட்டங்கள்... பழங்குடி பெண்ணின் மரணத்துக்கு பதில் என்ன?

“உலகத்தில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு, கர்ப்பிணிப் பெண்களுக்கு அரசு சார்பாக வளைகாப்பு நடத்துகிறோம்” என்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி! ஆனால், அவரது ஆட்சியில்தான் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவத்தின்போதான அலட்சிய மரணங்களும் அதிகரித்துவருகின்றன. கோவை மாவட்டத்தில், எந்த அடிப்படை வசதியும் இல்லாத பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சுயமாக குழந்தையைப் பிரசவித்த நிலையில், கவனிப்பாரின்றி இறந்துபோயிருக்கிறார்.