ஸ்டாலின், ஆ.ராசாவால் எங்கள் உயிருக்கு ஆபத்து! | Sadiq Basha wife ask security to Police Commissioner - Junior vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/03/2019)

ஸ்டாலின், ஆ.ராசாவால் எங்கள் உயிருக்கு ஆபத்து!

சாதிக் பாட்ஷா மனைவி புகார்...

2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, தற்கொலை செய்துகொண்டார் சாதிக் பாட்ஷா. அவருடைய மனைவி ரேகா பேகம், ‘தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆகியோரால் தன் குடும்பத்தினர் உயிருக்கு ஆபத்து இருக்கிறது’ என்று காவல் நிலையப் படியேறி இருப்பது பரபரப்பைப் பற்றவைத்துள்ளது. இதுகுறித்து, கடந்த 6.2.19 தேதியிட்ட இதழிலில் மிஸ்டர் கழுகு பகுதியில்,  “அ.தி.மு.க., பி.ஜே.பி தரப்பு ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்ஷா மர்ம மரண விவகாரத்தை விடப்போவதில்லை. அவரது மனைவியை வைத்து, தி.மு.க-வுக்கு நெருக்கடி கொடுக்கும் ஏற்பாடுகளும் நடக்கின்றன” என்று குறிப்பிட்டிருந்தோம். அப்போது சொன்னதுதான் இப்போது தொடங்கியிருக்கிறது.