பாகூர் ‘பார்’ ஊரான கதை! - ‘குடி’மகன்களுக்கு இலவச ஆட்டோ... | Puducherry Villagers affected by Alcohol - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/05/2019)

பாகூர் ‘பார்’ ஊரான கதை! - ‘குடி’மகன்களுக்கு இலவச ஆட்டோ...

குடிகெடுக்கும் புதுச்சேரி அரசு...

புதுச்சேரி அரசும் அரசியல்வாதிகளும் கடைபிடிக்கும் மதுக்கொள்கை, கிராமப்புறத்தில் இருக்கும் அப்பாவி விவசாய மக்களின் வாழ்க்கையைக் கூறுபோட்டுக்கொண்டிருக்கிறது. இதற்கு மோசமான உதாரணமாக திகழ்கிறது புதுச்சேரி மாநிலத்தில் பாகூர் என்கிற விவசாய கிராமம்.

‘தேசிய நெடுஞ்சாலைகளில் மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவதால், அதிக அளவில் விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. அதனால் நெடுஞ்சாலை ஓரங்களில் இருக்கும் மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும்’ என்று பா.ம.க-வின் வழக்கறிஞர் பாலு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ‘தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டருக்குள் இருக்கும் மதுக்கடைகளை மூட வேண்டும்’ என்று உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த 162 மதுக்கடைகளை மூடியதாக அறிவித்தது புதுச்சேரி அரசு. அதேசமயம், முன் வாசலை மூடிவிட்டு பின் வாசலைத் திறந்த கதையாக, மூடப்பட்ட மதுக்கடைகளை கிராமப்புறங்களில் திறந்துகொள்ள அனுமதி அளித்துவிட்டது புதுச்சேரி அரசு.

நீங்க எப்படி பீல் பண்றீங்க