“எங்கள் பகுதியின் பெயரை மாற்றுங்கள்” | Vellore kaspa people demand for area name change - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (04/05/2019)

“எங்கள் பகுதியின் பெயரை மாற்றுங்கள்”

சுயமரியாதைக்காகப் போராடும் ஒடுக்கப்பட்ட மக்கள்!

‘‘மனிதக் கழிவுகளை அள்ளுபவர்கள் என்று காலங்காலமாக எங்களை ஒதுக்கிவைத்திருப்பதுடன், எங்கள் குடியிருப்புப் பகுதியை ‘தோட்டி லைன்’ என்று பெயர்வைத்து அழைக்கிறார்கள். எங்களுக்கு சமூக அந்தஸ்து எல்லாம் வேண்டாம். எங்களின் குடியிருப்புப் பகுதியின் பெயரை மாற்றினால் போதும்” என்று கொந்தளிக்கிறார்கள் வேலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் துப்புரவுத் தொழிலாளர்கள்.

வேலூர் மாநகராட்சி கஸ்பாவில், ‘ஸ்கேவஞ்சர் காலனி’ என்ற பகுதியில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 1,500 பேர் வசிக்கிறார்கள். ஆங்கிலேயா் காலத்திலிருந்தே இந்த மக்கள் பல்வேறு துப்புரவுத் தொழில் செய்துவருகிறார்கள். காலப்போக்கில் இவர்களின் துப்புரவுப் பணிகள் படிப்படியாகக் குறைந்துவிட்டன என்றாலும் முழுமையாக நிறுத்தப்படவில்லை. வேலூரின் மாநகராட்சி அலுவலர்களே, இவர்கள் வசிக்கும் பகுதியை ‘தோட்டி லைன்’ என்றுதான் அழைக்கிறார்கள். கிட்டத்தட்ட ஐந்து தலைமுறைகளாகச் சாதியின் பெயரால் ஓரங்கட்டப்பட்டிருக்கும் இம்மக்கள், “எங்கள் பகுதிக்கு ‘டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் நகர் கஸ்பா’ என்று பெயர் மாற்றுங்கள்’’ என்று பல ஆண்டுகளாகப் போராடி வருகிறார்கள்.