தேர்தல் முடிவுக்குப் பிறகு... பவர் காட்டப் போகும் பவார்! | After Election Counting strategy of Sharad Pawar - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (08/05/2019)

தேர்தல் முடிவுக்குப் பிறகு... பவர் காட்டப் போகும் பவார்!

‘‘குஜராத் முதல்வராகப் பதவியேற்ற ஆரம்ப நாட்களில் என் கைப்பிடித்து வழிநடத்திக் கற்றுத் தந்தவர் சரத் பவார்’’ என்று ஒருமுறை புகழ்ந்தார் பிரதமர் நரேந்திர மோடி. ஆனால், இந்தத் தேர்தல் நேரத்தில் நிலைமை வேறு. சரத் பவாரின் சொந்த மண், மகாராஷ்டிராவின் பாராமதி தொகுதி. கடந்த 52 ஆண்டுகளாக இங்கு பவார் குடும்பத்தில் யாரோ ஒருவர்தான் ஜெயிக்கிறார்கள். எந்த அலை யிலும் இந்த நிலைமை மாறியதில்லை. இப்போது பவாரின் மகள் சுப்ரியா சுலே இங்கு களத்தில் இருக் கிறார். அவர்தான் இப்போதும் இந்தத் தொகுதியின் எம்.பி. ‘‘இந்த முறை எப்படியாவது இந்தத் தொகுதியை பவார் குடும்பத்திடமிருந்து கைப்பற்ற வேண்டும்’’ என மகாராஷ்டிரா பி.ஜே.பி தலைவர்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறார் மோடி.

சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸுக்கு மகாராஷ்டிராவைத் தாண்டி வெளியில் பெரிய செல்வாக்கு இல்லை. காங்கிரஸுடன் கூட்டணி அமைத்திருக்கும் அவரின் கட்சி, அங்கிருக்கும் 48 தொகுதிகளில், 19 தொகுதி களில்தான் போட்டியிடுகிறது. கிட்டத்தட்ட ஒரு மாநிலக் கட்சியின் தலைவர் போல கருதி அலட்சியம் செய்ய வேண்டிய அவரை மோடி இவ்வளவு தூரம் குறிவைக்கக் காரணம் என்ன? அங்குதான் இருக்கிறது பவாரின் பவர். ‘தேர்தல் முடிவுக்குப் பிறகு அவர் காட்டப் போகும் பவரில், பி.ஜே.பி மீண்டும் ஆட்சி அமைக்க முடியாமல் போகக்கூடும்’ என்ற அச்சம்தான் காரணம்.