‘அதனால்தான் அவர் நல்லகண்ணு!’ | Samuthirakani produce Short Film about R.Nallakannu - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (08/05/2019)

‘அதனால்தான் அவர் நல்லகண்ணு!’

புலியூர்குறிச்சி... திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். ஒரு கூலித்தொழிலாளியின் வீட்டில் வெடிகுண்டுகளுடன் உறங்கிக்கொண்டிருக்கிறார் நல்லகண்ணு. சுற்றிவளைத்து அவரைக் கைதுசெய்கிறது போலீஸ். அவரைக் கடுமையாக விசாரிக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்க்கும் பதில் கிடைக்கவே இல்லை. கனத்த பூட்ஸ் கால்களால் நல்லகண்ணுவின் கால்களில் ஏறி மிதிக்கிறார் இன்ஸ்பெக்டர். அப்போதும் பதில் வரவில்லை. உடனே, நல்லகண்ணுவின் மீசை முடியை ஒவ்வொன்றாகப் பிடுங்குகிறார்கள் போலீஸ்காரர்கள். வலியால் துடிக்கிறார். ஆனாலும், அவரிடமிருந்து வந்த ஒரே பதில் ‘மௌனம்’ மட்டும்தான்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரான தோழர் நல்லகண்ணு, அனைத்து அரசியல் கட்சியினராலும் பெரிதும் மதிக்கப்படுபவர். அதிர்ந்து பேசாத நல்லகண்ணுவைத்தான் பொதுவாகத் தெரியும். ‘அந்தக் காலத்தில் பல பண்ணையார்களுக்கும் காவல்துறைக்கும் சிம்மசொப்பனமாக விளங்கியவர் அவர்’ என்பது பலரும் அறியாதது. அந்தச் சம்பவத்துக்குப் பிறகு அவர் மீசையே வைத்துக்கொள்ளவில்லை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க