அமித்ஷா சூத்திரம் பலிக்குமா? | Amit Shah strategy for Parliament Election - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/05/2019)

அமித்ஷா சூத்திரம் பலிக்குமா?

டெல்லி தீன்தயாள் உபாத்யாயா மார்க்-கில் பி.ஜே.பி-யின் பிரமாண்ட ஐந்து மாடி கட்டட தலைமை அலுவலகம் உள்ளது. ஐந்தாவது மாடியில் பரபரப்புக்குப் பஞ்சமில்லை. ஆம்! அந்தக் கட்சியின் அகில இந்திய தலைவர் அமித் ஷா-வின் அறை அந்த ஐந்தாவது மாடியில் உள்ளது. அவர் முன் இருக்கும் தேர்தல் வியூகப் பட்டியல்தான் அந்தப் பரபரப்புக்குக் காரணம்.

அமித் ஷா, இந்திய அரசியலில் சமீபத்திய சூத்திரதாரி. குஜராத்திலிருந்து டெல்லிக்கு இடம் மாறியவர். பி.ஜே.பி கட்சி தொடங்கியது முதல் அந்தக் கட்சியின் முகமாக இருந்த இரட்டையர்கள் வாஜ்பாய் - அத்வானி. ஆனால், அந்த இரட்டையர்களுக்கு விடை கொடுத்து, 2014-ம் ஆண்டிலிருந்து பி.ஜே.பி-யின் புதிய இரட்டையர் முகமாக மாறியது மோடி - அமித் ஷா இணை. இருவருக்குள்ளும் இருந்த பரஸ்பர நம்பிக்கையே கடந்த ஐந்தாண்டுகளில் காவிக்கொடியைப் பல்வேறு மாநிலங்களிலும் பறக்கச் செய்தன. மோடியின் முகம் முன்னால் தெரிந்தாலும், அந்த முகத்துக்குப் பின்னால் இருந்து இயக்கும் நபராக இருப்பவர் அமித் ஷா.

பி.ஜே.பி-யின் கூட்டணி முதல் வேட்பாளர் தேர்வு வரை அனைத்திலும் ஆர்.எஸ்.எஸ் தலையீடு இல்லாமல் இருக்காது. ஆர்.எஸ்.எஸ்-ஸுடன் இணக்கமாக இருப்பவர்கள் மட்டுமே பி.ஜே.பி-யின் தலைமைப் பதவியைப்பெற முடியும். ஆனால், ஆர்.எஸ்.எஸ் முடிவையே பல நேரங்களில் புறந்தள்ளியுள்ளார் அமித் ஷா. அப்போது ஆர்.எஸ்.எஸ் வேடிக்கை மட்டுமே பார்த்தது. அமித் ஷாவின் வியூகத்துக்கு ஆர்.எஸ்.எஸ் பணிந்து போகவேண்டிய நெருக்கடியே இதற்குக் காரணம்.