என்று ஒழியும் இந்த சாதி வெறி! | Caste related violence in Tamil Nadu - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/05/2019)

என்று ஒழியும் இந்த சாதி வெறி!

சாதியை ஒழிக்க எத்தனை தலைவர்கள் வந்தாலும் நிகராக சாதி தலைவர்களும் முளைப்பதைத் தடுக்க முடியவில்லை. கடலூர், திண்டுக்கல், திருவாரூரில் நிகழ்ந்த வன்கொடுமைகள் அதை உரக்கச் சொல்கின்றன.

சம்பவம் 1

டலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கே.குச்சிப்பாளையம் கிராமத்தில் கடந்த 3-ம் தேதி சிறுவர்கள் கைப்பந்து விளையாடியுள்ளனர். அப்போது மேல்கவரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சிலர், ‘இங்கு விளையாடக் கூடாது’ என்று அவர்களிடம் கூறியுள்ளனர். இதையறிந்த அந்தப் பகுதிப் பெண்கள், பிரச்னை செய்த வாலிபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ள னர். ஒரு கட்டத்தில், அந்த இளைஞர்கள் அங்கு நின்றிருந்த பெண்களைத் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், இந்தச் செய்தி, மேல்கவரப்பட்டு மக்களுக்குக் காட்டுத் தீயாய்ப் பரவ, அங்கிருந்துவந்த 50-க்கும் மேற்பட்டோர் குச்சிப்பாளையம் வீடுகள்மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், இரண்டு கிராமங்களைச் சேர்ந்தவர்களும் காயமடைந்தனர். காயமடைந்த அனை வரும் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க