‘‘குடியால் பாதிக்கப்பட்டவர்கள் எனக்கு ஓட்டுப் போடுவார்கள்!” | Thirupparamkunram Independent candidate campaign - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (15/05/2019)

‘‘குடியால் பாதிக்கப்பட்டவர்கள் எனக்கு ஓட்டுப் போடுவார்கள்!”

திரும்பிப் பார்க்கவைக்கும் சுயேச்சை வேட்பாளர்

தேர்தல் பிரசாரத்தில், மக்களைக் கவர மண்டையைப் பிய்த்துக்கொள்ளும் வேட்பாளர்களுக்கு மத்தியில், ‘பிணம்’ வேடத்தில் வந்து பிரசாரம்செய்து திருப்பரங்குன்றத்தையே திரும்பிப் பார்க்கவைக்கிறார் சுயேச்சை வேட்பாளர் செல்லப்பாண்டி!

முதல்வர், துணை முதல்வர், எதிர்க் கட்சித் தலைவர், டி.டி.வி, கமல்ஹாசன் என கலர்ஃபுல் வி.வி.ஐ.பி-களின் தேர்தல் பிரசாரங்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளும் செல்லப்பாண்டி, தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்பு உணர்வு சங்கத்தின் மாநிலத் தலைவர். மது பாட்டில் கட் அவுட்டை ஸ்கூட்டரில் கட்டிக்கொண்டு, புயல்வேகப் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தவரை மடக்கிப் பிடித்துப் பேசினோம்.