அரவக்குறிச்சியில் ஆறாய் ஓடும் பணம்! | Aravakurichi by-election winning status - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (15/05/2019)

அரவக்குறிச்சியில் ஆறாய் ஓடும் பணம்!

ருகிற மே 19-ம் தேதி சட்டமன்ற இடைத் தேர்தல் நடக்கவிருக்கிற நான்கு தொகுதிகளில் அரவக்குறிச்சி, அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது. காரணம்... பணப் பட்டுவாடாவுக்குப் பெயர்போன தொகுதி இது!

தேர்தல் நாள் நெருங்கிக்கொண்டிருப்பதால், அனல் பறக்கப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் வேட்பாளர்கள். அ.தி.மு.க சார்பில், வி.வி.செந்தில்நாதன், தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அ.ம.மு.க சார்பில் பி.ஹெச்.ஷாகுல் ஹமீது ஆகியோர் களத்தில் நிற்கிறார்கள். இவர்களோடு, நாம் தமிழர் கட்சி சார்பில் பா.க.செல்வம், மக்கள் நீதி மய்யம் சார்பில் மோகன்ராஜ் ஆகியோரும் களத்தில் இருந்தாலும் தி.மு.க, அ.தி.மு.க, அ.ம.மு.க ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையில்தான் பலத்த போட்டி.

ஏற்கெனவே இத்தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் செந்தில் பாலாஜி. அதனால், தொகுதி முழுக்க அவருக்கு அத்துப்படி. ‘என்ன செல்வாக்கு இருந்தாலும் பணம் மட்டும்தான் வெற்றியைத் தேடித்தரும்’ என உறுதியாக நம்புகிறார் செந்தில் பாலாஜி. இறுதி நேரத்தில் இரண்டு கிராம் தங்க நாணயம், ஆன்ட்ராய்டு செல்போன் எனக் கொடுத்து வாக்காளர்களைக் கவர அதிரடித் திட்டங்களை வகுத்துவைத்திருக்கிறார் என்று பேச்சு அடிபடுகிறது. ‘சுத்திகரிக்கப்பட்ட குடி தண்ணீர், 25,000 ஏழைகளுக்கு இரண்டு சென்ட் நிலம்’ என்று இவர் வீசும் வாக்குறுதிகள் மக்களைக் கவர்கின்றன. அந்தந்த ஏரியாவின் பிரச்னைகளுக்கேற்ப வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களைத் திரும்பிப் பார்க்க வைக்கிறார் செந்தில் பாலாஜி. தி.மு.க ஜாம்பவான் கே.சி.பழனிசாமி, முன்னாள் மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் ஆகியோர் செந்தில் பாலாஜியிடமிருந்து விலகித்தான் நிற்கிறார்கள். இந்தப் பஞ்சாயத்தை ஸ்டாலின் மருமகன் சபரீசன்வரை கொண்டு போயிருக்கிறார் செந்தில் பாலாஜி. சபரீசன் தலையிட்டும் பிரச்னை முடிவுக்கு வரவில்லை. ஆனாலும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் சுற்றிச் சுழன்று வாக்கு சேகரித்து வருகிறார் செந்தில் பாலாஜி.