சாதி வாக்குகளே குறி... ஓட்டப்பிடாரத்தில் தேர்தல் தெறி! | Ottapidaram by-election winning status - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (15/05/2019)

சாதி வாக்குகளே குறி... ஓட்டப்பிடாரத்தில் தேர்தல் தெறி!

ரிசல் காட்டுப் பூமியான ஓட்டப்பிடாரத்தில் தெறிக்கிறது தேர்தல் அனல். இடைத்தேர்தல் நடக்கும் நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் தனித்தொகுதி இது மட்டுமே. ஆளுங்கட்சிக் கூட்டணியில் ஏழு அமைச்சர்கள் மேற்பார்வையிலும் தி.மு.க கூட்டணியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, கனிமொழி ஆகியோர் தலைமையிலும் பிரசார வியூகம் வகுக்கப்பட்டு தேர்தல் வேலை தீயாய் நடக்கிறது. அ.ம.மு.க சார்பில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளரான கடம்பூர் மாணிக்கராஜா, கட்சி நிர்வாகிகளை விரட்டி விரட்டி வேலை வாங்கிக்கொண்டிருக் கிறார்.

புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி இரண்டு முறை வெற்றி பெற்ற இந்தத் தொகுதியில், கூட்டணி பலத்தால் அ.தி.மு.க எளிதில் வெற்றி பெறவேண்டும். ஆனால், அ.ம.மு.க வேட்பாளர் சுந்தர்ராஜ் பிரிக்கும் வாக்குகள், இதைக் கடுமையான போட்டியாக மாற்றி யிருக்கிறது. கட்சி செல்வாக்கைத் தாண்டி, இங்கே சாதி அரசியல்தான் முன் நிற்கிறது. புதிய தமிழகம் கூட்டணி யால் தேவேந்திர குல வேளாளர் சமூகத் தின் வாக்குகள் அ.தி.மு.க-வுக்குச் சாதகமாயிருக்கும் நிலையில், பிற சமூகத்தினரின் வாக்குகள் அந்தக் கட்சிக்கு எதிராகத் திரும்பவும் வாய்ப்பு உண்டு.