மும்முனைப் போட்டியில் திருப்பரங்குன்றம்... பணப் பட்டுவாடா ஜரூர்... வாக்காளர்கள் கொண்டாட்டம் | Thirupparamkunram by-election winning status - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (15/05/2019)

மும்முனைப் போட்டியில் திருப்பரங்குன்றம்... பணப் பட்டுவாடா ஜரூர்... வாக்காளர்கள் கொண்டாட்டம்

திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க-வில் முனியாண்டி, தி.மு.க-வில் டாக்டர் சரவணன், அ.ம.மு.க-வில் மகேந்திரன் போட்டியிடுகிறார்கள். இவர்கள் தவிர நாம் தமிழர் கட்சி சார்பில் ரேவதி, ம.நீ.ம சார்பில் சக்திவேல் ஆகியோரும் களத்தில் உள்ளனர்.

இந்தத் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்,  மு.க.ஸ்டாலின், தினகரன் உள்ளிட்டோர் இரண்டாம் கட்டப் பிரசாரத்தை நிறைவுசெய்துள்ள நிலையில், பிரதானக் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்துள்ளன. ஆனால், தொகுதி மக்கள் யாருக்கு ஆதரவளிப்பார்கள் என்பதைத் துல்லியமாகக் கணிக்கமுடியவில்லை.

“தி.மு.க ஒரு அராஜகக் கட்சி. ஆனால், நான் ஒரு விவசாயி. என்னை மக்கள் எப்போதும் அணுகலாம்” என்று ஒரே டோனில் பேசிய எடப்பாடியின் பிரசாரம் மக்களைக் கவரவில்லை. அதற்குக் காரணம், திருப்பரங்குன்றத்தில் ஏற்கெனவே வெற்றிபெற்ற அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் தொகுதியில் நீண்டகாலமாக உள்ள பிரச்னைகளைத் தீர்க்க, நடவடிக்கை எடுக்கவில்லை; தொகுதிப் பக்கம்கூட அவர்கள் எட்டிப்பார்க்கவில்லை என்பதுதான். அதைப் பற்றியெல்லாம் முதல்வர் வாய் திறக்கவே இல்லை.

தி.மு.க வேட்பாளரை ஆதரித்து வைகோ, கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசர், முத்தரசன், கே.பாலகிருஷ்ணன் என கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் அன்றாடம் பேசி மக்களைக் கவர்ந்துவருகிறார்கள். குறிப்பாக, எடப்பாடி ஆட்சியில் நடந்த மக்கள் விரோதச் சம்பவங்களை வரிசைப்படுத்திய வைகோவின் பேச்சு மக்களை வெகுவாகக் கவர்ந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக மு.க.ஸ்டாலின், வேட்பாளருடன் திருப்பரங் குன்றம் தெருக்களில் நெசவாளர் வீடுகளில் உட்கார்ந்து வாக்குசேகரித்தது மக்களுக்கு ரொம்பவே புதிது. ‘நெசவாளர்கள் தி.மு.க-வின் தொப்புள்கொடி உறவுகள்’ என்று ஸ்டாலின் குறிப்பிட்டது, செளராஷ்டிர சமூக மக்களைக் கவர்ந்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க