இலங்கை அரசே இன்னொரு ஐ.எஸ் அமைப்புதான்! - சாடுகிறார் சண் மாஸ்டர் | sri lanka human rights activist Sun Master interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (15/05/2019)

இலங்கை அரசே இன்னொரு ஐ.எஸ் அமைப்புதான்! - சாடுகிறார் சண் மாஸ்டர்

ற்கொலைப்படை தாக்குதல்கள் ஏற்படுத்திய அதிர்விலிருந்து மெதுவாக மீள்கிறது இலங்கை. ‘நாடு இப்போது பாதுகாப்பாக இருக்கிறது’ என்று அறிவித்திருக்கிறார், அதிபர் சிறிசேனா. விசாரணையிலும் பாதி தூரத்தை அடைந்து விட்டதாகச் சொல்கிறார்கள் இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள். இலங்கையின் இன்றைய நிலைக்கான காரணங்கள் என்ன என்பது குறித்து இறுதி யுத்தத்துக்குப் பிறகு தமிழ்நாட்டில் தஞ்சமடைந்த இலங்கை மனித உரிமைச் செயற்பாட்டாளர் சண் மாஸ்டரிடம் பேசினோம்.

‘‘ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு, இலங்கையை ஏன் தேர்வு செய்தது என்று நினைக்கிறீர்கள்?”

‘‘இலங்கையை ஐ.எஸ்.ஐ.எஸ் தேர்வு செய்தமைக்குப் பல காரணங்கள் உள்ளன. இலங்கையில் 2012-ல் தோற்றம் பெற்ற தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்குச் சிங்கள அதிகார வர்க்கத்தினரும் சில முஸ்லிம் அரசியல் தலைமைகளும் துணை நிற்கிறார்கள். இந்த ஆதரவைப் பயன்படுத்தி இலங்கையில் அந்த அமைப்பு பலமடைந்துள்ளது. சிரியா எல்லையில் மிகப் பெரிய பின்னடைவைச் சந்தித்திருந்த ஐ.எஸ்.ஐ.எஸ், தெற்காசி யாவில் அரச ஆதரவுகொண்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பை அரவணைத்து, இலங்கையில் தாக்குதல் நடத்தியிருக்கிறது. கூடவே, இலங்கை அரசியலில் காணப்படும் அதிகார முரண்பாடுகளும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தன. இன்னொரு புறம், இலங்கையின் புலனாய்வுக் கட்டமைப்பு முழுமையாக அரசியல் மயமாகிக் கிடக்கிறது. இலங்கை அரசாங்கம் தனது ஆட்சியைத் தக்கவைப்பதற்கும் தமிழ் மக்களைக் கண்காணிப்பதற்குமே புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது. இதனால், மக்களின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் புலனாய்வு அமைப்புகள் கவனம் செலுத்தவில்லை. இலங்கை அரசின் இந்தப் போக்கு, தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்பை மேலும் எளிதாக்கியது.”