மக்களே உஷார்... 38% வட்டி - ஆசையைத் தூண்டு... கொள்ளை அடி... | Fraud Financial Companies - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (15/05/2019)

மக்களே உஷார்... 38% வட்டி - ஆசையைத் தூண்டு... கொள்ளை அடி...

பணத்தைச் சுருட்டும் நிதி நிறுவனங்கள்!

“ஒருத்தனை ஏமாத்தணும்னா அவன்கிட்ட கருணையை எதிர்பார்க்கக் கூடாது. அவனோட ஆசையைத் தூண்டணும்” - ‘சதுரங்க வேட்டை’ திரைப்படத்தில் வரும் வசனம் இது. இதே பாணியில், ‘அதிக வட்டி தருகிறோம்’ என்று ஆசையைத் தூண்டி, மோசடி செய்த நிதி நிறுவனங்களும் ஏராளம். அந்த வரிசையில், ‘முதலீட்டுக்கு மாதம் 10 சதவிகிதம் வட்டி தருகிறோம்’ என்று சொல்லி மக்களிடம் முதலீட்டைத் திரட்டி வருகிறது, கோவையைச் சேர்ந்த யுனிவர்சல் டிரேடிங் சொல்யூஷன் (UTS) என்னும் நிறுவனம். இன்னொரு பக்கம் இவர்களையே தூக்கிச்சாப்பிடும் வகையில் திருநெல்வேலியைச் சேர்ந்த கனெக்ட் டிரேடிங் சொல்யூஷன் (CTS) என்கிற நிறுவனம், ‘முதலீட்டுக்கு மாதம் 38 சதவிகிதம் வட்டி தருகிறோம்’ என்று சொல்லி முதலீடு திரட்டி வருகிறது.

கடந்த 04-05-19-ம் தேதியிட்ட ‘நாணயம் விகடன்’ இதழில், மேற்கண்ட யு.டி.எஸ் மற்றும் சி.டி.எஸ் நிறுவனங்கள் செய்துவரும் தொழில் கள்குறித்து விரிவாகக் கட்டுரை வெளியிட்டோம். மேலும், ‘மக்கள் முதலீடு செய்த பணம், திரும்பக் கிடைக்காமல் போவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன’ என்றும் எச்சரிக்கை விடுத்திருந் தோம். ஆனால், அந்தச் செய்தி மக்களிடம் சென்று சேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக, கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த நாணயம் விகடன் இதழ்கள் அனைத்தையும் மொத்தமாக வாங்கிவிட்டன, இந்த நிறுவனங்கள். இந்த நிலையில், அந்த நிறுவனங்கள் குறித்த விசாரணையில் இறங்கினோம்.