கழுகார் பதில்கள்! | Kazhugar Questions And Answers - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (15/05/2019)

கழுகார் பதில்கள்!

@ரம்யா ராகவ், வெள்ளகோவில், திருப்பூர்.
பணம், பதவி, ஆசை இவற்றில் எது மனிதனை அதிகம் சீரழிக்கிறது?


புத்தம் சரணம் கச்சாமி!

குடந்தை பரிபூரணன், வடகரை.
புயலுக்கெல்லாம் பெயர் சூட்ட வேண்டிய அவசியம் என்ன?


தானே, வர்தா, ஒகி, கஜா, ஃபானி என்று பெயரைச் சொன்னதுமே கடலூர், சென்னை, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், ஒடிசா எனச் சட்டென்று நினைவுக்கு வந்துவிடுகிறதே! வானிலை ஆராய்ச்சியாளர்களும் பொதுமக்களும் இப்படிப் புரிந்துகொள்வதற்காகத்தான் மிக முக்கியமாகப் பெயரிடப்படுகிறது. உலக அளவில் இது பல ஆண்டுகளாகவே நடைமுறையில் இருந்தாலும், நம்முடைய பிராந்தியத்தில் (இந்தியப் பெருங்கடல் மற்றும் அதையொட்டிய கடல் பகுதிகளில்) உருவாகும் புயல்களுக்குப் பெயரிடுவது 2004-ம் ஆண்டில்தான் தொடங்கியது.

கே.கே.பாலசுப்பிரமணியன், குனியமுத்தூர்.
‘சிலைகளைப் பாதுகாக்க முடியவில்லை என்றால், கோயில்களை மூடிவிடலாமே’ என்று தமிழக அரசிடம் உயர் நீதிமன்றம் கேட்டிருக்கிறதே?


அரசு அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் சிலர், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸை இயங்கவிடாமல் தொடர்ந்து இடையூறு செய்கிறார்கள். இதிலிருந்தே அவர்கள்தான் திருடர்கள் என்பது வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது. தீர்ப்பை எழுதி உள்ளே தூக்கிப்போடுவதை விடுத்து, கருத்துகளை வெளியிடுவதால் பலன் ஏதும் விளையப்போவதில்லை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க