"தி.மு.க ஆட்சிக்கு வர அ.ம.மு.க துணை போகாது!" - பெங்களூரு புகழேந்தி திட்டவட்டம்! | TTV Dinakaran supporter Bangaluru Pugazhenthi interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (15/05/2019)

"தி.மு.க ஆட்சிக்கு வர அ.ம.மு.க துணை போகாது!" - பெங்களூரு புகழேந்தி திட்டவட்டம்!

டுத்த வாரம் ஆட்சி கவிழ்ந்துவிடும், அடுத்த மாதம் ஆட்சி மாறும் என்று மு.க.ஸ்டாலினும் டி.டி.வி தினகரனும் மாறிமாறி ஆருடம் சொல்கிறார்கள். வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கிறது. இந்த நிலையில், ‘‘தி.மு.க-வுடன் சேர்ந்து அ.தி.மு.க ஆட்சியைக் கவிழ்ப்போம்’’ என்று சொல்லி பரபரப்பைப் பற்றவைத்திருக்கிறார் தங்க தமிழ்ச்செல்வன். ‘‘தினகரனுக்கும் ஸ்டாலினுக்கும் தொடர்பு உள்ளது என்பதை இப்போதாவது நம்புங்கள்’’ என்று எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும் அளவுக்கு இது சர்ச்சையாகிவிட்டது. இந்தச் சூழலில்தான் தினகரனுக்கு நெருக்கமானவரான பெங்களூரு புகழேந்தி, மதுரைக்கு வந்திருந்தார். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

‘‘தங்க தமிழ்ச்செல்வன், ‘தி.மு.க–வுடன் இணைந்து, அ.தி.மு.க. ஆட்சியைக் கவிழ்ப்போம்’ என்று கூறியது பெரிய சர்ச்சையாகி உள்ளதே. உங்கள் கட்சித் தலைமை சம்மதம் இல்லாமலா அவர் இந்தக் கருத்தைச் சொல்லியிருப்பார்?”

“அது அவருடைய சொந்தக் கருத்து. தி.மு.க ஆட்சிக்கு வர அ.ம.மு.க ஒருபோதும் துணை போகாது. மே 23-ம் தேதிக்குப் பிறகு, அ.தி.மு.க-வை டி.டி.வி-தான் வழிநடத்துவார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா எதிர்த்த தி.மு.க-வுக்கு எந்தக் காலத்திலும் நாங்கள் துணைபோக மாட்டோம். இப்போதும் பிரசாரத்தில் தி.மு.க-வைக் கடுமையாக விமர்சித்து வருகிறார் தினகரன்.”

‘‘தினகரன் தன்னை அ.ம.மு.க பொதுச் செயலாளராக அறிவித்துக்கொண்டதில் சசிகலாவுக்கு உடன்பாடு இல்லை என்கிறார்களே?”

“அப்படி எல்லாம் இல்லை. இது வடிகட்டிய பொய். தினகரன் ஒவ்வொரு செயல்பாட்டையும் சின்னம்மாவிடம் கேட்டுவிட்டுத்தான் செய்கிறார். அதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.’’

நீங்க எப்படி பீல் பண்றீங்க