“வன்மம் காட்டும் தி.மு.க!” - “ஆணவத்தின் உச்சத்தில் சீமான்!” - வீதிக்கு வந்த ‘விர்ச்சுவல் போர்’ | Seeman reacted for Murasoli Article - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (15/05/2019)

“வன்மம் காட்டும் தி.மு.க!” - “ஆணவத்தின் உச்சத்தில் சீமான்!” - வீதிக்கு வந்த ‘விர்ச்சுவல் போர்’

ஃபேஸ்புக், ட்விட்டர் என்று சமூக ஊடக உலகில் தி.மு.க-வினருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே நடைபெற்றுவந்த ‘விர்ச்சுவல் போர்’, இப்போது வீதிக்கு வந்துவிட்டது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானைத் தாக்கி, தி.மு.க-வின் முரசொலியில் தலையங்கமே தீட்டப்பட்டிருக்கிறது. ‘நாம் தமிழர் என்பதற்கான, உலக உரிமையைப் பெற்றுள்ளதாகக் கருதிக்கொண்டு கர்ஜனை என்று நினைத்து மேடைகளில் ‘கத்திக்’கொண்டு திரியும் ஒருவர்…’ என்று தொடங்குகிற அந்தத் தலையங்கத்தில், ‘ஃபோர்ஜரி வீரர்’, ‘இந்த மாமனிதர் தம்மை மாவீரர் என்று நினைத்துக்கொண்டு உரையாற்றுவார்’, ‘வெற்று கர்ஜனை வீரர்’, ‘வெற்றுச்சொல் வீரர்’ என்றெல்லாம் பெயரைக் குறிப்பிடாமலேயே சீமானைக் கடுமையாகத் தாக்கியுள்ளது தி.மு.க தரப்பு.

அதுவரையில், “துண்டுச்சீட்டு வைத்துக்கொண்டு பேசுகிறார்… ‘ஆக’ என்று அடிக்கடி சொல்கிறார்…” என்கிற அளவில் தி.மு.க தலைவர் ஸ்டாலினை விமர்சனம் செய்துகொண்டிருந்த சீமான், முரசொலியின் தலையங்கத்துக்குப் பிறகு, “தி.மு.க-வை ஒழிப்பேன்” என்கிற அளவுக்கு தி.மு.க மீது ஆவேசமாகப் பாய்ந்துள்ளார். இந்த மோதலுக்கு என்ன காரணம்?

நீங்க எப்படி பீல் பண்றீங்க