காதல் கொலை... கட்சிகள் நிலை! - பதற்றத்தில் கடலூர் மாவட்டம்! | Young Girl murder issue in VIRUTHASALAM - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (15/05/2019)

காதல் கொலை... கட்சிகள் நிலை! - பதற்றத்தில் கடலூர் மாவட்டம்!

டலூர் மாவட்டத்தில் இளைஞர் ஒருவர், பழகியப் பெண்ணைக் கொலைசெய்த சம்பவம், சாதி சண்டையாக உருவெடுத்து, கட்சித் தகராறாகவும் மாறியிருக்கிறது. இந்த விவகாரத்தில் பா.ம.க கட்சியினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்மீது குற்றம்சாட்டியிருப்பதால், பதற்றம் மேலும் கூடியிருக்கிறது.

மே மாதம் 8-ம் தேதி விருத்தாசலம் அருகே கருவேப்பிலங்குறிச்சி கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவி திலகவதி, கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக ஆகாஷ் என்ற இளைஞரைப் போலீஸார் கைதுசெய்தனர். திலகவதியும் ஆகாஷும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள். கொலைசெய்யப்பட்ட திலகவதிக்கு நியாயம் கேட்டு பா.ம.க-வினர் களத்தில் இறங்கியதாலும், ‘குற்றம் சாட்டப்படும் ஆகாஷ் வி.சி.க-வைச் சேர்ந்தவர் அல்ல’ என்று திருமாவளவன் மறுத்திருப்பதாலும் விஷயம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.