மணல் மாஃபியா பிடியில் மக்கள்! - திருவண்ணாமலையில் தொடரும் உயிர்ப்பலி | A Man murder by sand mafias in Tiruvannamalai - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (15/05/2019)

மணல் மாஃபியா பிடியில் மக்கள்! - திருவண்ணாமலையில் தொடரும் உயிர்ப்பலி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியிலிருக்கும் கமண்டல நாக நதி மற்றும் செய்யார் ஆறுகளில் நாளுக்கு நாள் மணல் கொள்ளை அதிகரித்துக்கொண்டே வருகிறது. 24 மணி நேரமும் மணல் கொள்ளை நடைபெறுவது, மணல் கடத்தலைத் தடுப்பவர்களை மிரட்டுவது என்று அட்டூழியங்கள் தொடர்ந்துவருகின்றன. இதன் உச்சகட்டமாக மே 2-ம் தேதி மணல் கடத்தல் குறித்த தகவலை அதிகாரி களுக்குத் தெரிவித்த, தினகரன் என்பவரை ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டந்துண்டமாக வெட்டி படுகொலை செய்திருக்கிறது மணல் கடத்தல் கும்பல்!

இப்படி எல்லாம் நடப்பது முதல்முறை அல்ல. சமீபத்தில் மணல் கடத்தலைத் தடுக்கச்சென்ற வட்டாட்சியர் ஒருவரை டிராக்டர் ஏற்றிக் கொலை செய்ய முயன்றது, ஒரு கடத்தல் கும்பல். மணல் லாரியை மடக்கிய சப் இன்ஸ்பெக்டர் ஒருவரையும் ஓட ஓட விரட்டிக் கொலைசெய்ய முயன்றது, ஒரு கடத்தல் கும்பல். கடந்த ஏப்ரல் 15-ம் தேதி செய்யார் ஆற்றில், மணல் அள்ளும் வேலைக்குப் போன 9-ம் வகுப்பு மாணவன் மணல் குழியில் சிக்கி உயிரிழந்தான். மே 6-ம் தேதி, மணல் திருட்டில் ஈடுபட்ட 14 வயது மாணவன் மணல் குழியில் சிக்கி உயிரிழந்தான். மணல் கொள்ளையால் இப்படி பல்வேறு வகைகளில் உயிரிழப்புகள் தொடர்கின்றன. ஆனால், தடுக்கத்தான் முடியவில்லை. காரணம், மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் அனைவரும் அரசியல் கட்சியினர் மற்றும் அவர்தம் பினாமிகள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க