“ரப்பர் மரத்துக்கு சல்ஃபர்... எங்களுக்கு கேன்சரா? | Western Ghats people affected by Sulfur Sparge to rubber tree - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (15/05/2019)

“ரப்பர் மரத்துக்கு சல்ஃபர்... எங்களுக்கு கேன்சரா?

குமுறும் மேற்குத் தொடர்ச்சி மலை மக்கள்!

“ரப்பர் மரங்களின் இலைகள் உதிர்ந்துபோகாமல் தடுக்க சல்ஃபர் பொடி (கந்தகம்) தூவுகிறார்கள். இதனால், கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, சிற்றாறு உள்ளிட்ட பல்வேறு அணைகளின் தண்ணீர் மாசுபடுகிறது. பல்வேறு நோய்களால் நாங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறோம். எங்களைக் காப்பாற்றுங்கள்.”

-இத்தகைய கூக்குரல், கன்னியாகுமரி மாவட்டத்திலிருக்கும் மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டியுள்ள கிராமங்களில் ஓயாமல் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் ரப்பர் உற்பத்தியில் தற்போதைக்கு முன்னணியில் இருப்பது கன்னியாகுமரி மாவட்டம்தான். இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு காலத்தில் கேரள மாநிலத்தில்தான் ரப்பர் அதிகமாகப் பயிர் செய்யப்பட்டுவந்தது. ஒரு கட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் பரவிய ரப்பர் விவசாயம், தற்போது முதலிடத்தைப் பிடித்துவிட்டது.