‘‘என் தங்கை கிடைக்கும்வரை கிளம்பமாட்டேன்’’ - கதறும் சத்தீஸ்கர் இளைஞர் | Follow up: Chhattisgarh young girl missing in Erode - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (15/05/2019)

‘‘என் தங்கை கிடைக்கும்வரை கிளம்பமாட்டேன்’’ - கதறும் சத்தீஸ்கர் இளைஞர்

ஃபாலோ அப்

யிற்றுப் பிழைப்புக்காகக் கூலி வேலை தேடி சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து ஈரோட்டுக்கு வந்திருக்கிறார் ஓர் இளம் பெண். வந்த இடத்தில் அவருக்கு என்ன நேர்ந்தது என்று தெரியவில்லை. கடந்த ஒன்பது மாதங்களாக அவரைக் காணவில்லை; அவரைப் பற்றி எந்தவொரு தகவலும் இல்லை. இதனால், ஈரோட்டில் முகாமிட்டு, அல்லாடி வருகிறார் அந்தப் பெண்ணின் சகோதரர். இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் மெத்தனமாக இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம், கொண்டேகான் மாவட்டத்திலிருந்து ஈரோட்டுக்கு கூலி வேலைக்காக ஏஜென்ட்கள் மூலம் அழைத்துவரப்பட்டவர் சோனா தைல். 22 வயது இளம் பெண்ணான இவர் கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்பே காணாமல் போய்விட்டார். இதுவரை இவரைப் பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து சோனா தைலைத் தேடி, அவரது சகோதரர் மஹரு ராம் பஹேல், சத்தீஸ்கர் சப் கலெக்டர் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழுவுடன், கடந்த வாரம் ஈரோட்டுக்கு வந்தார். இந்தக் குழு சோனா தைலைத் தேடிச் சென்றபோது, எதிர்பாராத விதமாகச் சில தனியார் நிறுவனங்களில் கொத்தடிமைகளாக இருந்த 26 வட மாநிலத்தவர்களை மீட்டனர். இதுகுறித்துக் கடந்த 12-05-19-ம் தேதியிட்ட ஜூ.வி இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம். ஆனால், சோனா தைல் குறித்து இன்னமும் எதுவும் தெரிய வராததால், மிகுந்த கவலையில் இருக்கிறார் ராம் பஹேல்.