“பார்த்ததை... நேசித்ததை எழுதினார் தோப்பில்!” | Memories of Thoppil Mohamed Meeran - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (15/05/2019)

“பார்த்ததை... நேசித்ததை எழுதினார் தோப்பில்!”

உருகும் கொடிக்கால் ஷேக் அப்துல்லா

ழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் மறைவால் கலங்கிக்கிடக்கிறது தமிழ் இலக்கிய உலகம். மலையாள மொழி பயின்றாலும் தமிழில் தடம் பதித்த எழுத்தாளர் அவர். தோழனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, தேம்பிய விழிகளும் நடுங்கும் கரங்களுமாக நின்றுகொண்டிருந்தார் 87 வயதான கடந்த தலைமுறையின் மூத்த அரசியல் தலைவர் கொடிக்கால் ஷேக் அப்துல்லா.

“நான் இலக்கியக் கூட்டங்களுக்கு விரும்பிச் சென்று எழுத்தாளர்களின் பேச்சைக் குறிப்பெடுத்துக் கொண்டிருப் பேன். ஆரம்ப காலத்தில் அதைப் பார்த்த தோப்பில் முகமது மீரான், என்னை உளவுப் பிரிவு போலீஸ் என்று நினைத்துவிட்டார். உடனே, சக நண்பர்களிடம் சொல்லி விசாரித்திருக் கிறார். அப்புறம்தான் என்னைப் பற்றி முழுமையாக அறிந்துகொண்டார். இதையே அவர் பிற்காலங்களில், ‘இலக்கியக் கூட்டங்கள் நடந்தால், அதில் முதல் இருக்கையில் அமர்ந்திருப் பார் கொடிக்கால். அவர் குறிப்பு எடுத்துக்கொண்டே இருப்பார். அந்தக் குறிப்புகள் டன் கணக்கில் இருக்கும்’ என்று கிண்டலாகச் சொல்வார். அவரும் நானும் இடதுசாரி சிந்தனை கொண்டவர்கள் என்பதால், எங்களுக்குள் நட்பு இறுகியது. தன் படைப்புகளை என்னிடம் கொடுத்து விமர்சனம் கேட்பார். என் சிறை வாழ்க்கையைப் பற்றிப் புத்தகம் எழுதும்படி என்னைத் தூண்டிக் கொண்டே இருந்தார் மீரான். சிறை வாழ்க்கை நிகழ்வுகள், கைதிகளின் கதைகளைத் துருவித்துருவிக் கேட்பார்.