நான்கு தொகுதி இடைத்தேர்தல்... இறுதி நிலவரம் என்ன? | Four Assembly constituencies By-election winning status - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/05/2019)

நான்கு தொகுதி இடைத்தேர்தல்... இறுதி நிலவரம் என்ன?

திருப்பரங்குன்றம் - ஜொலிக்குது சூரியன்!

தி
ருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில், அ.தி.மு.க-வில் முனியாண்டி, தி.மு.க-வில் டாக்டர் சரவணன், அ.ம.மு.க-வில் மகேந்திரன் போட்டியிடுகின்றனர். இங்கே பிரசாரத்தைச் சரியாக முடித்தார்களோ இல்லையோ... பணப் பட்டுவாடாவை கச்சிதமாக முடித்துவிட்டன அரசியல் கட்சிகள். பண விநியோகத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பறக்கும் படையினர், திருப்பரங்குன்றம் கோயிலுக்குச் சாமி கும்பிட வந்தவர்களின் வாகனங்களைச் சோதனை செய்து ஃபிலிம் காட்டிக் கொண்டிருந்தார்கள். ஆச்சர்யமாக மே 15-ம் தேதி வில்லாபுரத்தில் பண விநியோகம் செய்த அ.தி.மு.க-வினர் நான்கு பேரை பணத்துடன் பிடித்துக் கைதுசெய்தனர்.