அன்று விமானப் பணிப்பெண்... இன்று தாய்லாந்து மகாராணி! | Thailand Queen Suthida Tidjai - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/05/2019)

அன்று விமானப் பணிப்பெண்... இன்று தாய்லாந்து மகாராணி!

சுதிடா டிட்ஜாய்… தாய்லாந்து நாட்டு மக்களால், சமீபத்தில் அதிகமாக உச்சரிக்கப்படும் பெயர் இது. ஆம், இவர்தான் தற்போது தாய்லாந்து நாட்டின் மகாராணி!

தாய்லாந்து அரசராக 70 ஆண்டுகளாகப் பதவி வகித்த பூமிபோல் அதுல்யதேஜ், கடந்த 2016-ம் ஆண்டு காலமானார். அதைத் தொடர்ந்து மே 2-ம் தேதி அரசராக முடிசூட்டிக்கொண்டார், இளவரசர் வஜ்ரா லங்கோர்ன். இவர் முடிசூட்டிக் கொள்வதற்குச் சில நாள்களுக்கு முன்னர் சுதிடா டிட்ஜாயைத் தன் மனைவியாகக் குடும்பத்தில் இணைத்துக்கொண்டதுடன், இவர்தான் இனி அரசியாக விளங்குவார் என்றும் அறிவித்தார். மன்னரின் இந்த அறிவிப்பு தாய்லாந்து மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

வஜ்ரா லங்கோர்ன், தாய்லாந்து விமான நிறுவனத்தில் விமான ஓட்டியாகப் பணியாற்றியபோது, அங்கு விமானப் பணிப்பெண்ணாக இருந்த சுதிடாவுடன் காதல் மலர்ந்தது. இளவரசரின் மனதை வென்ற சுதிடா, படிப்படியாக முன்னேறி, கடைசியில் அரச குடும்பத்தின் பிரத்யேகப் பாதுகாப்புப் படையில் இணைந்தார். இளவரசருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தாலும், அரச குடும்பத்தினரிடமிருந்து சற்று விலகியே இருந்துள்ளார் சுதிடா.

நீங்க எப்படி பீல் பண்றீங்க