‘கருத்து கந்தசாமி’ கமல்... ‘நாக்கு அவுட்’ ராஜேந்திர பாலாஜி! | Kamal Haasan Controversial talk about Godse - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/05/2019)

‘கருத்து கந்தசாமி’ கமல்... ‘நாக்கு அவுட்’ ராஜேந்திர பாலாஜி!

சுழற்றியடிக்கும் சர்ச்சை

‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து... அவர், நாதுராம் கோட்சே’ என்கிற பேச்சின் மூலமாக இந்திய அரசியல் விவாத களத்தின் மய்யத்துக்கு வந்துவிட்டார், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்!

அரவக்குறிச்சி தொகுதியில், மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்துப் பேசினார், கமல்ஹாசன். ஆற்றுமணல் கொள்ளை, தண்ணீர் பிரச்னை, முருங்கைக்காய் தொழிற்சாலை, அரசு மருத்துவமனை என உள்ளூர் பிரச்னைகளைத் தொட்டுப் பயணித்த கமலின் பேச்சு ஒருகட்டத்தில் பாபர் மசூதி இடிப்பு, நாதுராம் கோட்சே என்று திசைதிரும்பியது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க