முருகனின் வாகனத்துக்கு வந்த சோதனை! - சந்திக்குவரும் திருச்செந்தூர் கோயில் விவகாரம் | Thiruchendur Subramaniya Swamy Temple Peacock statue Broken issue - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/05/2019)

முருகனின் வாகனத்துக்கு வந்த சோதனை! - சந்திக்குவரும் திருச்செந்தூர் கோயில் விவகாரம்

திருச்செந்தூர் முருகன் கோயிலின் மயில் சிலை உடைந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில், சிலை தடுப்புப் பிரிவு ஐ.ஜி-யான பொன் மாணிக்கவேலிடம் புகார் அளித்ததாலேயே அந்தக் கோயிலில் இணை ஆணையராகப் பணிபுரிந்த பாரதி, (தற்போது திருவேற்காடு மாரியம்மன் கோயில் இணை ஆணையர்) அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோயிலின் மூலவர் சந்நிதிக்கு எதிரே தேவ இந்திர மயில், சூரபத்மனை ஆட்கொண்ட மயில் ஆகிய இரண்டு கற்சிலைகள் இருக்கின்றன. புதிய ஏ.சி பொருத்தும் பணியின்போது, அதன் பாகங்கள் கீழே விழுந்ததில், மயில் சிலையின் தலை உடைந்ததாகவும் அதற்குப் பதிலாகப் புதிய சிலை வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்துக்குப் பிறகு இங்கு இணை ஆணையராகப் பாரதி என்பவர் பொறுப்பு ஏற்றார். தொடர்ந்து, மயில் சிலை மாற்றப்பட்டபோது பணியிலிருந்த முன்னாள் இணை ஆணையர் பரஞ்ஜோதி, கண்காணிப் பாளர் பத்மநாபன், ஊழியர்கள் சுவாமி நாதன், குமார், ராஜா, சுரேஷ் ஆகியோர் மீது திருச்செந்தூர் கோயில் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட் டது. இந்த நிலையில்தான் கோயிலுக்குச் சொந்தமான கடைகளை விதிகளை மீறி ஏலத்தில் ஒதுக்கியதாகக் கூறி, பாரதியை பணியிடை நீக்கம் செய்துள்ளது தமிழக அரசு.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க