இந்தத் தேர்தலில் உங்கள் நினைவில் நிற்பது எது? | Parliament eletion 2019 memories - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (22/05/2019)

இந்தத் தேர்தலில் உங்கள் நினைவில் நிற்பது எது?

ஓவியங்கள்: அரஸ்

பிரியங்கா சர்மா பாவம்... வசமாக சிக்கிக்கொண்டார். மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பி.ஜே.பி பிரமுகரான இவர், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை மோசமாகச் சித்திரித்து மீம்ஸ் வெளியிட்டதற்காகக் கைது செய்யப்பட்டார். ‘இது என் பேச்சு மற்றும் கருத்துரிமையைப் பறிக்கும் செயல்’ என்று அவர் பிணை கேட்டு உச்ச நீதிமன்றம் வந்தார். ‘‘அடுத்தவரின் உரிமையில் தலையிட்டு நீங்கள் வரம்பு மீறும்போது, உங்கள் பேச்சு சுதந்திரம் முடிவுக்கு வந்துவிடுகிறது. பேச்சு சுதந்திரம், மற்றவர்களை அவமதிப்பதற்கு அல்ல!’’ என்றார்கள் நீதிபதிகள். இதே விதி எல்லோருக்கும் பொருந்தும் என்றால், அநேகமாக 2019 தேர்தல் காலம் முழுவதுமே நம் பெரும்பாலான தலைவர்கள் சிறையில்தான் இருந்திருப்பார்கள். இவ்வளவு மோசமான தனிநபர் தாக்குதல்களை இந்தியா இதற்குமுன் கண்டதில்லை.