அறம் இழக்கும் அறநிலையத்துறை! - ஊழலில் சிக்கி சீரழியும் அவலம் | Scam in Hindu Religious & Charitable Endowments Department - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/05/2019)

அறம் இழக்கும் அறநிலையத்துறை! - ஊழலில் சிக்கி சீரழியும் அவலம்

‘கணக்கு வழக்கு இல்லாமல், கோயில் சொத்துகள் ஆக்கிரமிப்பு... கோடிக்கணக்கு மதிப்பிலான கோயில் ஆபரணங்கள் அபகரிப்பு’ என்று பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி அல்லல்படுகிறது இந்து சமய அறநிலையத் துறை. இதுவரை இலைமறை காயாகப் பேசப்பட்டுவந்த அறநிலையத் துறை மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகின்றன.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சொந்த மான நான்காயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ளதாக திருத்தொண்டர் சபை சமீபத்தில் புகார் எழுப்பியது. சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. காரைக்குடி கொப்புடை நாயகி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான தங்க, வெள்ளி ஆபரணங்களும் சட்டவிரோதமாக கையாளப் பட்டதாகப் புகார் எழுந்தது. இந்த விவகாரத்திலும் அந்தக் கோயிலின் செயல் அலுவலர் அர்ஜுனன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது திருத்தொண்டர் சபை.