கணக்கு பலித்தது... குஷியில் எடப்பாடி! | Edappadi Palaniswami happy for by-election Victory - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/05/2019)

கணக்கு பலித்தது... குஷியில் எடப்பாடி!

“இரண்டு மாதங்கள்கூட நீடிக்காது இந்த ஆட்சி” என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றபோது எதிர்க்கட்சிகள் கொக்கரித்தன. ஆனால், இரண்டு ஆண்டுகளை வெற்றிகரமாகக் கடந்த எடப்பாடி பழனிசாமி, இப்போது இடைத்தேர்தல் களத்திலும் ஆட்சியைக் கரைசேர்த்து தன்னையும் நிரூபித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக இருந்த 22 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். நாடாளுமன்றத் தேர்தலோடு, இடைத்தேர்தலையும் சேர்த்து நடத்தினால் அது எடப்பாடி பழனிசாமிக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என்று பலரும் கணக்குப் போட்டனர். எடப்பாடி பழனிசாமியோ வேறு கணக்கைப்போட ஆரம்பித்தார். தன் ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள எத்தனை சட்டமன்ற உறுப்பினர்கள் வேண்டும் என்று முதலில் கணக்கிட்டார். தற்போது இரட்டை இலை சின்னத்தில் வெற்றிபெற்றவர்களின் எண்ணிக்கை சபாநாயகருடன் சேர்த்து 114 என்ற எண்ணிக்கையில் உள்ளது. இன்னும் நான்கு எம்.எல்.ஏ-க்கள் இருந்தாலே பெரும்பான்மையை நிரூபித்துவிடலாம். ஆனால், தினகரன் பக்கம் மூன்று பேர், தன்னிச்சையாகச் செயல்படும் இரண்டு பேர் என்று எடப்பாடிக்கு இடையூறாக ஐந்து பேர் இருந்தார்கள். எனவே, ஒன்பது சீட்டை கைப்பற்றிவிட்டால், எந்தப் பிரச்னையும் இல்லை என்கிற கணக்குக்கு எடப்பாடி வந்த பிறகே, தேர்தல் வியூகத்தைக் கட்டமைத்தார்.