Published:Updated:

ஒரே மாதத்தில் 20 கால்நடைகளை வேட்டையாடிய பெண் புலி; கூண்டு வைத்து பிடித்த வனத்துறை!

கூண்டில் சிக்கிய பெண் புலி
News
கூண்டில் சிக்கிய பெண் புலி

இந்தப் பெண் புலிக்கு சுமார் 10 வயது இருக்கலாம். வயது முதிர்வு காரணமாக வேட்டைத்திறனை இழந்து இந்தப் புலி கால்நடைகளை வேட்டையாடி வந்திருக்கலாம். உடலில் காயங்கள் உள்ளனவா என்பதை கால்நடை மருத்துவர்கள் சோதனை செய்து வருகின்றனர்.

ஒரே மாதத்தில் 20 கால்நடைகளை வேட்டையாடிய பெண் புலி; கூண்டு வைத்து பிடித்த வனத்துறை!

இந்தப் பெண் புலிக்கு சுமார் 10 வயது இருக்கலாம். வயது முதிர்வு காரணமாக வேட்டைத்திறனை இழந்து இந்தப் புலி கால்நடைகளை வேட்டையாடி வந்திருக்கலாம். உடலில் காயங்கள் உள்ளனவா என்பதை கால்நடை மருத்துவர்கள் சோதனை செய்து வருகின்றனர்.

Published:Updated:
கூண்டில் சிக்கிய பெண் புலி
News
கூண்டில் சிக்கிய பெண் புலி

வனங்கள் அடர்ந்த கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்புகளை நோக்கி படையெடுக்கும் வனவிலங்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக புலி, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் குடியிருப்புப் பகுதியில் உலவி கால்நடைகளை வேட்டையாடி வருகின்றன. கடந்த மாதம் வயநாடு சீரால் பகுதியில் கால்நடைகளைத் தொடர்ந்து வேட்டையாடி வந்த ஆண் புலியை ஒருமாதம் போராடி கூண்டு வைத்து பிடித்தனர்.

கூண்டில் சிக்கிய புலி
கூண்டில் சிக்கிய புலி

வேட்டைத்திறன் இழந்த அந்தப் புலிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில், வயநாடு மீனங்காடி சுற்றுவட்டார பகுதிகளில் உலவி வந்த புலி ஒன்று தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வந்தது. ஒரே மாதத்தில் 20-க்கும் அதிகமான கால்நடைகளை வேட்டையாடிய இந்தப் புலியை பிடிக்க வலியுறுத்தி உள்ளூர் மக்கள் போராட்டம் நடத்தினர்.

இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் கண்காணிப்பு கேமிராக்களைப் பொறுத்தி அந்தப் புலியைக் கண்காணித்து வந்தனர். கால்நடைகளைத் தாக்கி வரும் குறிப்பிட்ட அந்தப் புலி நடமாட்டம் உள்ள பொன்முடி கோட்டை பகுதியில் கூண்டு வைத்தனர். நேற்று முன்தினம் இரவு அந்தப் பகுதியில் உலவிய புலி கூண்டில் சிக்கியது. உடனடியாக லேசான மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை மையத்துக்குக் கொண்டு சென்றனர்.

கூண்டில் சிக்கிய பெண் புலி
கூண்டில் சிக்கிய பெண் புலி

இது குறித்து பேசிய வயநாடு வனத்துறையினர், ``கூண்டில் சிக்கிய இந்தப் பெண் புலிக்கு சுமார் 10 வயது இருக்கலாம். வயது முதிர்வு காரணமாக வேட்டைத்திறனை இழந்து இந்தப் புலி கால்நடைகளை வேட்டையாடி வந்திருக்கலாம். உடலில் காயங்கள் உள்ளனவா என்பதைக் கால்நடை மருத்துவர்கள் சோதனை செய்து வருகின்றனர்" எனத் தெரிவித்துள்ளனர்.