Published:Updated:

கேரளாவில் பறவைக் காய்ச்சல்... நீலகிரி மாவட்ட எல்லையில் சோதனை தீவிரம் தீவிரம்!

சோதனை சாவடி
News
சோதனை சாவடி

பறவை காய்ச்சல் பாதிப்புக்குள்ளான பறவைகளை அழித்து வருகின்றனர். மேலும் பரவாமல் இருக்கும் வகையில் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரளாவில் பறவைக் காய்ச்சல்... நீலகிரி மாவட்ட எல்லையில் சோதனை தீவிரம் தீவிரம்!

பறவை காய்ச்சல் பாதிப்புக்குள்ளான பறவைகளை அழித்து வருகின்றனர். மேலும் பரவாமல் இருக்கும் வகையில் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Published:Updated:
சோதனை சாவடி
News
சோதனை சாவடி

கேரள மாநிலத்தின் ஆலப்புழா பகுதிகளில் இயங்கிவரும் சில கோழி பண்ணைகளில் கோழி, வாத்து போன்ற பறவைகள் கூட்டமாக இறந்து வருகின்றன. இதனைத் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டதில் பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. பறவை காய்ச்சல் பாதிப்புக்குள்ளான பறவைகளை அழித்து வருகின்றனர். மேலும் பரவாமல் இருக்கும் வகையில் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சோதனை சாவடி
சோதனை சாவடி

கேரள எல்லையோர மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவலை தடுக்க அந்தந்த மாநில எல்லைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள எல்லையோர சோதனைச் சாவடிகளில் கால்நடை மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்த பின்னரே அனுமதித்து வருகின்றனர்.

பறவை காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கால்நடை பராமரிப்புத்துறையின் நீலகிரி மாவட்ட இணை இயக்குநர் நீலவண்ணன், "கேரள மாநிலத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளித்த பின்னரே தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்படுகிறது. கேரளாவிலிருந்து கோழி, வாத்து, முட்டை மற்றும் கோழித் தீவனங்களை கொண்டு வர தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்" என்றார்.

அம்ரித் ஐஏஎஸ்
அம்ரித் ஐஏஎஸ்

இது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் பேசுகையில், "தமிழக - கேரள மற்றும் கர்நாடக எல்லையில் உள்ள நாடுகாணி, தாளூர், சோலாடி உள்ளிட்ட 8 சோதனை சாவடிகளிலும் கால்நடை மருத்துவர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். நமது மாநில எல்லைகளில் காய்ச்சல் ஏதும் ஏற்படவில்லை" என்றார்.