Published:Updated:

நீலகிரி: சாலையேரம் சறுக்கிச் சென்ற யானைகள்; கான்கிரீட்க்கு பதில் புல் தரை... நெடுஞ்சாலைத்துறை!

யானை கூட்டம்
News
யானை கூட்டம்

யானைகள் எந்த சிரமமும் இல்லாமல் வழக்கமான இடங்களில் சாலையை கடந்து வந்தன. ஆனால், சாலை விரிவாக்க பணிகள் தொடங்கப்பட்டது முதல் யானைகள் இடம் பெயர முடியாமல் தவித்து வருகின்றன.

நீலகிரி: சாலையேரம் சறுக்கிச் சென்ற யானைகள்; கான்கிரீட்க்கு பதில் புல் தரை... நெடுஞ்சாலைத்துறை!

யானைகள் எந்த சிரமமும் இல்லாமல் வழக்கமான இடங்களில் சாலையை கடந்து வந்தன. ஆனால், சாலை விரிவாக்க பணிகள் தொடங்கப்பட்டது முதல் யானைகள் இடம் பெயர முடியாமல் தவித்து வருகின்றன.

Published:Updated:
யானை கூட்டம்
News
யானை கூட்டம்

வனங்கள் அடர்ந்த நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையேயான சாலையில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக யானைகள் கூட்டமாக எந்த சிரமமும் இல்லாமல் வழக்கமான இடங்களில் சாலையை கடந்து வந்தன.

யானைகள்
யானைகள்

ஆனால், சாலை விரிவாக்க பணிகள் தொடங்கப்பட்டது முதல் யானைகள் இடம் பெயர முடியாமல் தவித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக யானைகள் சாலையை கடக்க அதிகம் பயன்படுத்தி வந்த நந்தகோபாலா பாலம் பகுதியில் பெரிய அளவிலான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பகுதியில் யானைகளுக்கு விசாலமான வழித்தடத்தை உருவாக்கி கொடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நேரில் ஆய்வு செய்து உத்தரவிட்டனர். இந்த நிலையில், அண்மையில் இந்த பகுதிக்கு குட்டியுடன் வந்த யானை கூட்டம் ஒன்று சாலையை கடந்து கீழே இறங்கிச் நடக்க முடியாமல் சறுக்கிய படியே சரிவில் சென்றன. யானைகள் சறுக்கிச் செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி விவாதத்தை கிளப்பியது.

நெடுஞ் சாலைத்துறை
நெடுஞ் சாலைத்துறை

இதனைத் தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

இது குறித்து தெரிவித்த தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், "யானைகள் கடப்பதில் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த பகுதியில் ‌இருக்கும கான்க்ரீட் பாதையை அகற்றி விட்டு யானைகள் எளிதில் சென்றுவர ஏற்றவாறு புல் தரை அமைக்க முடிவு செய்திருக்கிறோம். மரங்களையும் நடவு செய்து வனச்சூழலை உருவாக்கி கொடுக்க இருக்கின்றோம்" என்றனர்.