Published:Updated:

யானைகள் வழித்தட விவகாரம்: மூடப்படும் நூற்றாண்டு பழைமையான கல்லாறு பழப்பண்ணை!

கல்லாறு பழப்பண்ணை
News
கல்லாறு பழப்பண்ணை

யானைகள் வழித்தட விவகாரத்தில் நூற்றாண்டு பழைமை வாய்ந்த அரசு பழப்பண்ணை மூடப்படவுள்ள நிலையில், கல்லாறு சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் பிற ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

யானைகள் வழித்தட விவகாரம்: மூடப்படும் நூற்றாண்டு பழைமையான கல்லாறு பழப்பண்ணை!

யானைகள் வழித்தட விவகாரத்தில் நூற்றாண்டு பழைமை வாய்ந்த அரசு பழப்பண்ணை மூடப்படவுள்ள நிலையில், கல்லாறு சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் பிற ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Published:Updated:
கல்லாறு பழப்பண்ணை
News
கல்லாறு பழப்பண்ணை

நீலகிரி மலை அடிவாரத்தில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கல்லாறு பழப்பண்ண நிறுவப்பட்டது. இதமான தட்பவெப்பநிலையில் வளரும் துரியன், மங்குஸ்தான், பட்டர் ஃபுரூட், ரம்புட்டான், வாட்டர் ஆப்பிள், லிட்சி, மலேயன் ஆப்பிள், சிங்கப்பூர் பலா போன்ற மிக அரிதான பழவகை மரங்களை நடவு செய்து பராமரித்து வந்தனர். இங்கு விளைவிக்கப்படும் பழங்களை ஒப்பந்த அடிப்படையில் விற்பனை செய்து வந்தனர்.

கல்லாறு பழப்பண்ணை
கல்லாறு பழப்பண்ணை

தற்போது தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த பழப்பண்ண யானைகள் வழித்தடத்தில் அமைந்திருப்பதால் பண்ணையை மூடும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூடும் நடவடிக்கையில் தோட்டக்கலைத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய தோட்டக்கலைத்துறை அலுவலர் ஒருவர், "அடர்ந்த வனத்தைக் கொண்டிருக்கும் கல்லாறு பகுதியில் 1900-ம் ஆண்டு ஆங்கியேர்களால் பழப்பண்ணை தொடங்கப்பட்டது. கோவை மாவட்டம் மேட்டுபாளையத்தில் இந்த பண்ணை இருந்தாலும் நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை கட்டுபாட்டில் செயல்பட்டு வருகிறது. குறிப்பிட்ட தட்வெட்பத்தில் மட்டுமே வளரும் தன்மைகொண்ட அரியவகை பழ மரங்கள் அதிகளவில் உள்ளன. மேலும், பாக்கு, ஜாதிக்காய், மிளகு, சில்வர் ஓக் போன்ற மரங்களின் நாற்றுகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

கல்லாறு பழப்பண்ணை
கல்லாறு பழப்பண்ணை

யானைகளின் முக்கிய வழித்தடமாக இருப்பதால் அவை இடையூரின்றி கடந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், யானைகள் வழித்தடத்தில் அமைந்திருக்கும் கல்லாறு பழப்பண்ணையை நிரந்தரமாக மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, இப்பண்ணை மூடப்படுகிறது. இதற்கு மாற்றாக சிறுமுகை பகுதியில் வனத்துறை சார்பில் 20 ஏக்கர் மாற்றிடம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.