Published:Updated:

நீலகிரி: வழிபாட்டுக்குச் சென்ற முதியவருக்கு நேர்ந்த பயங்கரம்! யானை தாக்கி உயிரிழந்த சோகம்!

யானை தாக்கி உயிரிழந்த இருதயராஜ்
யானை தாக்கி உயிரிழந்த இருதயராஜ்

"எப்போதுமே யானை நடமாட்டம் இருக்கும் என்பதால் உள்ளூர் மக்கள் மிகுந்த கவனமாகவே இருப்பார்கள். இவரும் இதே ரூட்டில் நாள்தோறும் சென்றுவருபவர்தான்"- நீலகிரி வனத்துறையினர்.

62 வயதற்கான இருதயராஜ் என்ற நபர் தனது சொந்த ஊரான கர்நாடக மாநிலத்திலிருந்து வந்து நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகில் உள்ள மாவனல்லா பகுதியில் வசித்து வருகிறார்.இதே பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு நாள்தோறும் காலையில் சென்று பிரார்த்தனை செய்வது வழக்கம். இன்று காலையும் வழக்கம் போல் மாவனல்லா பகுதியில் இருந்து மசினகுடி பகுதிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த காட்டுயானை ஒன்று இவரை விரட்டித் தாக்கியது. இதில் கடுமையான காயம் அடைந்த இருதயராஜை மீட்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக மசினகுடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு முதலதவி அளிக்கப்பட்டு,மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால்,சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

யானை தாக்கி உயிரிழந்தஇருதயராஜ்
யானை தாக்கி உயிரிழந்தஇருதயராஜ்

இந்த சம்பவம் தொடர்பாக சோகத்துடன் பேசிய வனத்துறையினர், "இந்தப் பகுதிகளில் எப்போதுமே யானை நடமாட்டம் இருக்கும் என்பதால் உள்ளூர் மக்கள் மிகுந்த கவனமாகவே இருப்பார்கள். இவரும் இதே ரூட்டில் நாள்தோறும் சென்றுவருபவர்தான். இன்று இப்படி ஆகிவிட்டது. இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்படும். உரிய இழப்பீடு பெற்றுத்தரப்படும் "என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு