Published:Updated:

கொடநாடு:`புலன் விசாரணையை வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் நடத்த வேண்டும்'-எதிர்த்தரப்பு கேட்பதன் பின்னணி?!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் மேலதிக விசாரணை பரபரப்புடன் நடைபெறும் இந்த வேளையில், வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் விசாரணையை நடத்த வேண்டும் என விசாரணைக்குழுவிடம் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்த வழக்கின் முதன்மைக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சயான், கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சிறையிலிருந்த நிலையில், கடந்த மாதம் அவருக்கு மீண்டும் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. ஜாமீனில் வெளிவந்த சயானிடம் கூடுதல் விசாரணைக்காக, கடந்த மாதம் 17-ம் தேதி ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டது. தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வாக்குமூலத்துக்குப் பிறகு, கனகராஜின் சகோதரர் தனபால், எஸ்டேட் மேலாளர் நடராஜ், கொலை நடந்த தினத்தன்று பணியில் இருந்த காவல்துறையினர், தடயவியல் நிபுணர்கள், மின்வாரிய அதிகாரிகள் உட்பட சாட்சிகள் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் தீவிர புலன்விசாரணை நடைபெற்றது.

கொடநாடு வழக்கு: `என்கிட்ட வாங்கின 4 செல்போன் எங்கே?!’ - நீதிமன்றத்தில் போலீஸாரிடம் சயான் வாக்குவாதம்
கொடநாடு வழக்கு விசாரணை
கொடநாடு வழக்கு விசாரணை

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ஜம்சீர் அலியிடம் கடந்த 13-ம் தேதி விசாரணை நடத்தப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட மற்றவர்களுக்கும் சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகும்படி கேட்டிருக்கிறார்கள். கேரளாவில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதாலும், தாங்கள் தமிழகத்துக்கு வந்து செல்வதால் உயிருக்குப் பாதுகாப்பும் இல்லை எனவும் கூறி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் விசாரணையை நடத்த வேண்டும் என குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் மேற்கு மண்டல ஐ.ஜி-க்கு மனு கொடுத்துள்ளனர்.

இதன் பின்னணி குறித்து நம்மிடம் பகிரும் எதிர்த்தரப்பு வழக்கறிஞர் விஜயன், ``இந்த வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ள திபு, சதீசன், சந்தோஷ்சாமி, ஜித்தின்ஜாய் ஆகியோர் சார்பில் நாங்கள் கோர்ட்டில் ஆஜராகிவருகிறோம். இந்த வழக்கு விசாரணை தற்போது நடந்துவரும் நிலையில், இந்த நால்வரையும் கூடுதல் விசாரணைக்காக ஊட்டிக்கு அழைத்துள்ளனர். கேரள மாநிலத்தில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது. மேலும், ஜித்தின்ஜாய் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

கொடநாடு விவகாரம்
கொடநாடு விவகாரம்

இதனால், இவர்களால் நேரடியாக ஆஜராக முடியாத நிலை ஏற்பட்டிருக்கிற. அதுமட்டுமின்றி, இவர்களுக்குப் போதுமான பாதுகாப்பும் இல்லை என நம்புகின்றனர். எனவே, தங்களை வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என எங்கள் மூலமாக ஐ.ஜி-க்கு மனுத்தாக்கல் செய்யத் தீர்மானித்தனர். இதைத் தொடர்ந்து, நாங்கள் இவர்கள் நால்வரையும் வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.ஜி சுதாகருக்கு மின்னஞ்சல் மூலமாக மனு செய்திருக்கிறோம். இந்த முறையில் விசாரித்தால் இன்னும் சுதந்திரமாக இவர்கள் வாக்குமூலத்தை அளிக்க ஏதுவாக இருக்கும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு