Published:Updated:

கோத்தகிரியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சிறுத்தை; விசாரணையில் வனத்துறை!

இறந்து கிடந்த சிறுத்தை
News
இறந்து கிடந்த சிறுத்தை

உதவி வன பாதுகாவலர் முன்னிலையில் சிறுத்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது, அதே இடத்தில் எரியூட்டப்பட்டது. சிறுத்தையின் உடலில் எந்தவித காயங்களும் இருக்கவில்லை.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகில் உள்ள ஒரசோலை பகுதியில் சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடப்பதை உள்ளூர் மக்கள் கண்டுள்ளனர். உடனே வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலைப் பெற்ற வனத்துறை பணியாளர்கள் சிலர், அந்தப் பகுதிக்கு சென்று சிறுத்தை இறப்பை உறுதி செய்துள்ளனர். கால்நடை மருத்துவர்களுடன் வந்த வனத்துறை அதிகாரிகள், சிறுத்தையின் உடலை ஆய்வு செய்தனர். பின்னர், உடற்கூறாய்வு செய்து மாதிரிகளை சேகரித்துள்ளனர். சிறுத்தையின் உடலை தீயிட்டு எரித்துள்ளனர்.

இறந்து கிடந்த சிறுத்தை
இறந்து கிடந்த சிறுத்தை

சிறுத்தையின் இறப்பு குறித்து பேசிய வனத்துறையினர், ``சுமார் 6 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை இறப்பு குறித்து கட்டபெட்டு வனத்துறையினர் விசாரித்து வருகிறார்கள். உதவி வனப் பாதுகாவலர் முன்னிலையில் சிறுத்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதே இடத்தில் எரியூட்டப்பட்டது. சிறுத்தையின் உடலில் எந்தவித காயங்களும் இருக்கவில்லை. இறப்புக்கான காரணங்கள் குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம். கூறாய்வு முடிவுகள் வந்த பிறகே உண்மைக் காரணம் தெரியவரும்" என்றனர்.