Published:Updated:

வேட்டைத்திறன் இழப்பு; தொடர் கால்நடை வேட்டை... வயநாட்டில் பிடிபட்ட புலி!

பிடிபட்ட புலி
News
பிடிபட்ட புலி

வாகேரி பகுதியில் உள்ள ஒரு தனியார் எஸ்டேட்டில் வளர்ப்பு நாய் ஒன்றை புலி வேட்டையாடியது கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தெரிய வந்தது. புலி நடமாட்டம்‌ காரணமாகத் தோட்ட பணியார்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

வேட்டைத்திறன் இழப்பு; தொடர் கால்நடை வேட்டை... வயநாட்டில் பிடிபட்ட புலி!

வாகேரி பகுதியில் உள்ள ஒரு தனியார் எஸ்டேட்டில் வளர்ப்பு நாய் ஒன்றை புலி வேட்டையாடியது கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தெரிய வந்தது. புலி நடமாட்டம்‌ காரணமாகத் தோட்ட பணியார்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

Published:Updated:
பிடிபட்ட புலி
News
பிடிபட்ட புலி

கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், சுல்தான் பத்தேரி அருகில் உள்ள எஸ்டேட் பகுதிகளில் புலி ஒன்று கால்நடைகளைத் தொடர்ந்து வேட்டையாடி வருவதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில், வாகேரி பகுதியில் உள்ள ஒரு தனியார் எஸ்டேட்டில் வளர்ப்பு நாய் ஒன்றை புலி வேட்டையாடியது கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தெரிய வந்தது. புலி நடமாட்டம்‌ காரணமாகத் தோட்டப் பணியார்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கால்நடைகளை வேட்டையாடி வரும் அந்தப் புலி மனிதர்களையும் தாக்கும் அபாயம் இருப்பதால் பிடிக்க வலியுறுத்தி மக்கள் அழுத்தம் கொடுத்தனர்.

பிடிபட்ட புலி
பிடிபட்ட புலி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புலியின் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். வாகேரி பகுதியில் உள்ள ஒரு காப்பித் தோட்டத்தில் புலி ஒன்று பதுங்கியிருப்பதைக் கண்டறிந்தனர். கால்நடைகளைத் தாக்கி வரும் குறிப்பிட்ட புலிதான் இது என்பதை உறுதி செய்யப்பட்டது. உடனடியாக காபித் தோட்டத்தில் கூண்டுகளை வைத்து காத்திருந்தனர். ஒரு பகல் வேளையில் கூண்டைச்‌ சுற்றி வலம் வந்த அந்தப் புலி மதியம் கூண்டுக்குள் சிக்கியது. உயிருடன் பிடிபட்ட அந்தப் புலியை வன உயிரின காப்பகத்துக்குக் கொண்டு சென்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து வயநாடு வனத்துறையினர், ``கூண்டில் சிக்கிய புலிக்கு சுமார் 14 வயது இருக்கலாம். வயது முதிர்வு காரணமாக வேட்டைத் திறனை இழந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. மனிதர்களைத் தாக்கும் அபாயம் இருப்பதால் பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

பிடிபட்ட புலி
பிடிபட்ட புலி

இந்தப் புலியை குப்பாடி வன உயிரின காப்பகத்தில் வைத்து அதன் உடல் நிலையைக் கண்காணித்து வருகிறோம். தொடர் பராமரிப்புகள் குறித்து அதிகாரிகள் முடிவு செய்வார்கள்" என்றனர்.