Published:Updated:

5 மாதங்களுக்குப் பிறகு தொகுதிக்கு வந்த ஆ.ராசா; விமர்சித்த அதிமுக-வினர்

எடப்பாடி பழனிசாமி குறித்து சர்ச்சையாக தான் பேசிய பேச்சுக்கு ஊட்டியில் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுவிட்டு, கடந்த மார்ச் மாதம் இறுதியில் ஊட்டியிலிருந்து கிளம்பினார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் மூன்று முறை போட்டியிட்டு, இரண்டு முறை வெற்றி பெற்றவர் ஆ.ராசா. நீலகிரி தொகுதியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரான எம்.பி ஆ.ராசா, நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் பரப்புரைக்காக நீலகிரிக்கு வருகை தந்திருந்தார். எடப்பாடி பழனிசாமி குறித்து சர்ச்சையாக தான் பேசிய பேச்சுக்கு ஊட்டியில் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுவிட்டு, கடந்த மார்ச் மாதம் இறுதியில் ஊட்டியிலிருந்து கிளம்பினார்.

ஆ.ராசா
ஆ.ராசா
`எம்.ஜி.ஆர்., கோபால்சாமி போன்ற துரோகிகளையே பார்த்துவிட்டோம்!’ - துரைமுருகன்

கட்சிப் பணி, மனைவியின் மரணம் போன்ற சில காரணங்களால் கடந்த ஐந்து மாதங்களாக சொந்தத் தொகுதி பக்கமே வராமல் தவிர்த்துவந்தார். ஐந்து மாதங்களுக்குப் பிறகு நேற்று முன்தினம் மாலை ஊட்டிக்கு வருகை தந்தார். பல மாதங்களுக்குப் பிறகு தொகுதிக்கு வந்த எம்.பி-யை வரவேற்று பல இடங்களில் வரவேற்பு போஸ்டர்களைக் கட்சியின் தொண்டர்கள் வைத்தனர்.

`சொந்தத் தொகுதிக்கு எம்.பி வருவதையே வரவேற்கும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது. இந்த முறையும் மக்களின் குறைகளைக் கேட்க வரவில்லை, உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கு திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யவே வந்திருக்கிறார்' என அதிமுக-வினர் சமூக வலைதளங்களில் விமர்சித்தனர்.

ஆ.ராசா
ஆ.ராசா

இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய அதிமுக நிர்வாகி ஒருவர், `` `பிறந்த வீடு பெரம்பலூர், புகுந்த வீடு நீலகிரி’ என்ற டயாலக்கை எல்லா மேடைகளிலும் தவறாமல் அளந்துவிடும் எம்.பி ராசா தொகுதிப் பக்கம் எட்டிப்பார்க்கவே தயங்குவது ஏன் என்று தெரியவில்லை. முடிந்த தேர்தலுடன், தனித் தொகுதிக்கான சுழற்சி நிறைவடைந்து பொது தொகுதியாக மாறவிருக்கிறது நீலகிரி. அடுத்த முறை இங்கு போட்டியிட முடியாது எனத் தெரிந்துகொண்டு அலட்சியத்தில் இருக்கிறார்" என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். இந்தக் குற்றச்சாட்டு குறித்து எம்.பி ராசா தரப்பினர், ``நீலகிரி தொகுதி மக்களின் குறைகளைத் தொடர்ந்து கேட்டறிந்துவருகிறோம். ஊட்டியில் கட்டப்பட்டுவரும் அரசு மருத்துவக் கல்லூரியின் கட்டுமானப் பணிகளை இன்றைக்குக்கூட ஆய்வு செய்தோம்.அவர்கள் சொல்வதுபோல் வேறு எந்த நோக்கமும் கிடையாது" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு