Published:Updated:

பந்தலூரில் உலாவரும் மக்னா - 2: 10 மாதங்களில் 45 வீடுகள் சேதம்; யானையை வனத்துக்குள் விட உத்தரவு!

மக்னா யானை
News
மக்னா யானை

கடந்த சனிக்கிழமை இரவு, தேவாலா வாழைவயல் பகுதிக்குள் நுழைந்த மக்னா யானை பாப்பாத்தி என்ற தோட்ட தொழிலாளியின் வீட்டை இடித்து அவரையும் தாக்கி கொன்றது.

பந்தலூரில் உலாவரும் மக்னா - 2: 10 மாதங்களில் 45 வீடுகள் சேதம்; யானையை வனத்துக்குள் விட உத்தரவு!

கடந்த சனிக்கிழமை இரவு, தேவாலா வாழைவயல் பகுதிக்குள் நுழைந்த மக்னா யானை பாப்பாத்தி என்ற தோட்ட தொழிலாளியின் வீட்டை இடித்து அவரையும் தாக்கி கொன்றது.

Published:Updated:
மக்னா யானை
News
மக்னா யானை

நீலகிரி மாவட்டம், கூடலூர் வன கோட்டத்திற்கு உட்பட்ட பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உலா வரும் மக்னா ( தந்தம் இல்லாத ஆண் காட்டுயானை) ஒன்று குடியிருப்புகளை சேதப்படுத்தி அரிசி உள்ளிட்ட தானியங்களை உட்கொள்வதை வழக்கமாக கொண்டிருக்கிறது. 'எம்.பி -2 ' அதாவது பந்தலூர் மக்னா -2 என அந்த யானைக்குப் பெயரிட்டு வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். கடந்த 10 மாதங்களில் இந்த மக்னா யானை 45 குடியிருப்புகளை இடித்து சேதப்படுத்தியிருக்கிறது. கடந்த சனிக்கிழமை இரவு தேவாலா வாழைவயல் பகுதிக்குள் நுழைந்த மக்னா யானை பாப்பாத்தி என்ற தோட்ட தொழிலாளியின் வீட்டை இடித்து அவரையும் தாக்கி கொன்றது.

போராட்டம்
போராட்டம்

அருகில் இருந்த வீட்டையும் இடித்து சேதப்படுத்தியது. அந்த வீட்டில் இருந்த இருவரும் போராடி உயிர் பிழைத்தனர். தொடர்ந்து வீடுகளை சேதப்படுத்தி வரும் மக்னா யானையைப் பிடிக்க வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். யானை தாக்கி உயிரிழந்த பாப்பாத்தியின் உடலை வாங்க மறுத்து போராடி வந்தனர். இதனைத் தொடர்ந்து பந்தலூர் மக்னாவைப் பிடித்து முதுமலை அடர் வனத்துக்குள் விடுவிக்க வனத்துறை உத்தரவை பிறப்பித்தது. தற்போது மக்னாவை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் குழுவாக ஈடுபட்டு வருகின்றனர்.

யானையைப் பிடிக்கும் முயற்சி குறித்து தெரிவித்த நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் ஐஏஎஸ், " தலைமை வனப்பாதுகாவலர் தலைமையில் மாவட்ட வன அலுவலர்கள், உதவி வன பாதுகாவலர், 4 வனச்சரகர்கள் மற்றும் 40க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள், கால்நடை மருத்துவ குழுவினர் அப்பகுதியில் முகாமிட்டு யானையை கண்காணித்து வருகின்றனர்.

மக்னா யானை
மக்னா யானை

யானையை பத்திரமாக பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உதவிக்கு முதுமலையில் இருந்து கும்கி யானைகள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளன. யானைகளை பிடிப்பதில் நிபுணத்துவம் பெற்ற இருவர் கோவையில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர். யானையைப் பிடித்து உடல் பரிசோதனை செய்து மீண்டும் முதுமலையில் விடுவிக்கப்படும்" என்றார்.